• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் மாதவன் – அனுஷ்கா!

by admin
February 21, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் மாதவன் – அனுஷ்கா!
11
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இந்திய அளவில் புகழ் பெற்ற இந்த நடிகர்கள் நடிக்கும், இந்த படத்தின் பணிகள் தற்போது முழு மூச்சில் நடந்து வருகிறது. இது ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் மர்டர் மிஸ்டரி திரில்லர் திரைப்படமாகும். கோபி மோகன் உடன் இணைந்து கதை மற்றும் திதைக்கதையை எழுதுவதோடு இணை தயாரிப்பாளராவும் பணிபுரிகிறார் கோனா வெங்கட்.

இயக்குனர் ஹேமந்த் மதுகர் கூறும்போது, “நான் உண்மையிலேயே உறைந்து போய் இருக்கிறேன். பல வருடங்களாக நடிப்பில் மகத்தான சாதனையை புரிந்திருக்கும் மிகச்சிறந்த நடிகர்கள் இந்த படத்துக்கு கிடைத்திருப்பது, என்னை மிகக் கடுமையாக உழைக்க, அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உந்துகிறது. குறிப்பாக, இது ஒரு சைலண்ட் த்ரில்லராக இருப்பதால் அது முழுமையாக ‘நடிகர்கள்’ மற்றும் ‘தொழில்நுட்ப கலைஞர்கள்’ சார்ந்தது, அதற்கேற்ற வகையில் சிறப்பானவர்களை கண்டறிந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மாதவனின் அர்ப்பணிப்பு அபாரம். அதனால் தான் அப்படிப்பட்ட திரைப்படங்கள் அவரை விரும்புகின்றன. அவரின் சமீபத்திய கதைகளில், சிறந்த நடிகராக ப்ரீத் சீரீஸிலும், மிகக்கடுமையான பயிற்சியாளராக இறுதிச்சுற்று படத்திலும் அவர் ஸ்கோர் செய்ததை பார்த்தாலே புரியும்.

அவர் ‘சாக்லேட் பாய்’ என்று சொல்லப்படுவதை விரும்புவதில்லை, மாறாக தன் திறமைகளை மேம்படுத்தும் கதைகளை நடிக்கவே விரும்புகிறார். இந்த படம் அவரது மகுடத்தில் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

அனுஷ்கா ஷெட்டியின் எந்த சூழ்நிலையிலும் அவரது நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி தான் ஒரு ‘அற்புதமான நடிகை’ என்று நிரூபித்தவர். இந்த படத்தில் அவரின் கதாப்பாத்திரத்துக்கு இது போன்ற குணங்கள் தேவைப்பட்டது. அனுஷ்காவை தவிர யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்று தோன்றியது. அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் சுப்பாராஜு ஆகியோர் மொழி மற்றும் எல்லைகளை கடந்து தங்கள் திறமையால் பிரபலமானவர்கள்.

அவர்களும் இந்த படத்தில் நடிப்பது பலம். குறிப்பாக கோனா வெங்கட் சார் மற்றும் கோபி மோகன் சார் எழுதிய கதை மற்றும் திரைக்கதையை திரையில் மொழி பெயர்க்கும் செயல்முறையை அனுபவிப்பதில் ஒரு இயக்குனராக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

ஒரு சைலண்ட் சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்த படத்தில், ATMOS ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் மிக நேர்த்தியான காட்சியமைப்புகள் என ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் உயர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களை கொண்டு இதுவரை உணர்ந்திராத மிகச்சிறந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்கள். இதற்காக தான் மொத்த குழுவும் கடுமையாக உழைத்து வருகிறோம் என்கிறார் இயக்குனர்.

கோபி சுந்தர் இசையமைக்கிறார். பாப் பிரவுன் (ப்ரிடேடர்ஸ், தி வால் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் புகழ்) சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். க்‌ஷனம்’ மற்றும் ‘கூடாச்சாரி’ போன்ற திரைப்படங்களில் தன் ஒளிப்பதிவு மூலம் தெலுங்கு சினிமாக்கு ஒரு புது வண்ணத்தை வழங்கிய ஷானியேல் டியோ ஒளிப்பதிவு செய்கிறார். யனா ருசனோவா (ப்ரிசம், ட்ரோன் வார்ஸ், தி நெக்ஸ்ட் பிக் திங் புகழ்) கலை இயக்குனராக பணிபுரிகிறார். கோபி மோகன் திரைக்கதை எழுதியிருக்கிறார். 1500 திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை காஸ்மோஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், கிரண் ஸ்டுடியோஸ் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கிறது.அ

Tags: AnushkaMadhvan
Previous Post

Pon Manickavel – Official Teaser

Next Post

ஜெய் நடிப்பில் உருவாகும் புதிய படம் பிரேக்கிங் நியூஸ்.!

Next Post
ஜெய் நடிப்பில் உருவாகும் புதிய படம் பிரேக்கிங் நியூஸ்.!

ஜெய் நடிப்பில் உருவாகும் புதிய படம் பிரேக்கிங் நியூஸ்.!

Popular News

  • ஹைக்கூ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

    0 shares
    Share 0 Tweet 0
  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் அடுத்த திரைப்பயணம் ‘ஏ ஒ டி’ (AOT) – குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அழகான திரைப்படமாக உருவாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி ஒரு ஜென்டில்மேன்.அவருடன் நடித்தது மறக்க முடியாதது: வியக்கிறார் நடிகை சாய் ரோகிணி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.