• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் படத்திற்கு ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

by Tamil2daynews
March 29, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் படத்திற்கு ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

 

கதையம்சம் சார்ந்த நல்ல திரைப்படங்கள்  விமர்சகர்கள்,  சினிமா பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பிடமும் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களில்  ஒருவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் படங்களில் சிறந்த பரிமாணங்களைக் கொடுத்துள்ளார்.  சமீபத்தில் வெளியான ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் சினிமா பிரியர்களின் கவனத்தைக் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, தனது அடுத்த இயக்கமாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  படப்பிடிப்பை இப்போது முடித்துள்ளார். இந்தப் படத்தை தயாள் பத்நாபனே தயாரிக்கவும் செய்கிறார். படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், தற்போது படத்திற்கு ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.
இந்த தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன் கூறுகையில், “அடிப்படையில், நான் ஹனுமானின் தீவிரமான பக்தர் மற்றும் அவரது இருப்பை உள்ளடக்கிய சில தலைப்புகளை என்னுடைய படங்களுக்கு வைக்க விரும்பினேன். இந்தப்படம் பல சாதக பாதகங்களைக் கொண்ட காவல் நிலையத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களைக் கதையாகக் கொண்டது. உண்மையான ஸ்டேஷன் பெயர்கள் மற்றும் பகுதிகளை நாங்கள் இதில் படமாக்க விரும்பவில்லை. அதனால், ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்று கற்பனையான பெயரைக் கொண்டு வர முடிவு செய்தோம். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது”.

வரலக்ஷ்மி சரத்குமார் & ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நான்-லீனியர் பாணியில் புதிய பரிமாணத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
 
படத்தின் தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு: தயாள் பத்மநாபன்,
இசை, பின்னணி இசை: மணிகாந்த் கத்ரி,
ஒளிப்பதிவு: சேகர் சந்திரா,
படத்தொகுப்பு: ப்ரீத்தி மோகன்,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சிஎஸ் பாலச்சந்தர்,
ஆடை வடிவமைப்பு: மீரா சித்திரப்பாவை,
ஸ்டண்ட் கோரியோகிராஃபி: சேத்தன் டி சோசா,
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ் வினோத் குமார்.

Previous Post

‘விடுதலை பாகம் 1’ படத்தில் நடித்தது குறித்து பவானி ஸ்ரீ!

Next Post

‘பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்

Next Post
‘பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்

'பத்து தல' படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்

Popular News

  • பார்வதி நாயரின் ‘உன் பார்வையில்’ படத்தை – Sun NXT-இல், டிசம்பர் 19 முதல் கண்டுகளியுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அவதார்’ திரைப்படத்திற்கு இந்தியாவின் ஆன்மீகத்துடன் வலுவான தொடர்பு இருக்கிறது என்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • Draft by GKB புரொடக்ஷன்ஸ் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் கிளாப் அடித்து துவங்கி வைத்தார் #GRK19

    0 shares
    Share 0 Tweet 0
  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ( Million Dollar Studios )- வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்கும் அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு பறை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

December 15, 2025

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ( Million Dollar Studios )- வேல்ஸ் ஃபில்ம் இன்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்கும் அசோக் செல்வன் – நிமிஷா சஜயன் நடித்துள்ள ரொமாண்டிக் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

December 15, 2025

மகாசேனா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

December 15, 2025

நடிகர் சாந்தனு பாக்யராஜின் ’மெஜந்தா’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது!

December 15, 2025

Draft by GKB புரொடக்ஷன்ஸ் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் கிளாப் அடித்து துவங்கி வைத்தார் #GRK19

December 15, 2025

நடிகர் தனுஷ் வெளியிட்ட சிறை படத்தின் அசத்தல் டிரெய்லர்

December 15, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.