• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்

by tamil2daynews
March 30, 2023
in சினிமா செய்திகள்
0
‘பத்து தல’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் கெளதம் கார்த்திக்
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் கௌதம் கார்த்திக் தனது மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘பத்து தல’ உலகம் முழுவதும் மார்ச் 30, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருவதால் உற்சாகமாக இருக்கிறார். நடிகர் சிலம்பரசன், இயக்குநர் ஓபிலி என் கிருஷ்ணா மற்றும் ஒட்டுமொத்த குழுவினருடன் இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் கௌதம் கார்த்திக் கூறும்போது, “ஒரு நடிகருக்கு அறிமுகப் படம் எப்படி முக்கியமோ, அதேபோன்று திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய ஒரு படமும் முக்கியமானது. ‘பத்து தல’ திரைப்படம் எனக்கு அப்படியான ஒரு உணர்வுப்பூர்வமான படம். முழு படமும் மிகவும் சவாலானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. இது முழுமையான ஒரு டீம் வொர்க். அணியில் ஒருவர் இல்லாமல் கூட, இந்தப் படம் திட்டமிட்டபடி முழுமையாக முடித்திருக்க முடியாது. இரண்டு கொரோனா காலக்கட்டங்கள் உட்பட பல கடினமான விஷயங்களையும் நாங்கள் கடந்துதான் வந்திருக்கிறோம். இந்த சமயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள் ஜெயந்திலால் கடா மற்றும் கே.இ.ஞானவேல்ராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். சிலம்பரசன் அண்ணன் இல்லாவிட்டால் ‘பத்து தல’ திரைப்படம் எங்களுக்கு நிறைவேறாத ஒன்றாகவே இருந்திருக்கும். எனக்காக அவர் சிரமப்பட்டு, கடினமான சவால்களைச் சந்தித்த விதம் என்னை வாயடைக்கச் செய்கிறது. அவர் உடல் அளவில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். ஒரு படத்திற்காக மீண்டும் எடையை அதிகரிக்க யாராவது தைரியமாக முடிவு செய்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இது கற்பனைக்கு அப்பாற்பட்டது! அவர் அதைச் செய்தார்.

அவர் என்ன செய்கிறார் என்பதற்கான அவரது அர்ப்பணிப்பும் ஆர்வமும் தான் இவ்வளவு அற்புதமான ரசிகர் பட்டாளத்தை அவருக்குத் தந்துள்ளது. அவரது நடிப்பு திரையில் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். ப்ரியா பவானி சங்கர் ஒரு அற்புதமான கோ- ஸ்டார். படப்பிடிப்புக்கு சரியாக வரும் நேரமும் ஆர்வமும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இயக்குநர் கிருஷ்ணா சார் தூணாக இருந்து முழு படத்தையும் தோளில் சுமந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் சார் பல நடிகர்களின் காட் ஃபாதர். நான் எப்போதும் அவரை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாகவே பார்க்கிறேன். அத்தகைய ஜாம்பவானுடன் பணியாற்றுவது எனக்கு ஆசீர்வாதம்! மேலும் இந்த படத்தில் அவர் எனக்காக அழகான பாடல்களை கொடுத்துள்ளார்”.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜாவும், பென் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெயந்திலால் கடாவும் தயாரித்திருக்கும் படம் ‘பத்து தல’. சிலம்பரசன் டிஆர், கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், கலையரசன், டீஜே அருணாசலம், அனு சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஓபிலி என் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பாளராகவும் மிலன் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

Previous Post

தமிழ் ஆஹா ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் படத்திற்கு ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

Next Post

‘விடுதலை பாகம் 1’ படத்தில் நடித்தது குறித்து பவானி ஸ்ரீ!

Next Post
‘விடுதலை பாகம் 1’ படத்தில் நடித்தது குறித்து பவானி ஸ்ரீ!

'விடுதலை பாகம் 1' படத்தில் நடித்தது குறித்து பவானி ஸ்ரீ!

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.