• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’

by Tamil2daynews
August 3, 2020
in சினிமா செய்திகள்
0
‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘ஹிப் ஹாப்’ ஆதியின் ‘மீசையை முறுக்கு’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து கவனம் ஈர்த்த ஆனந்த், தற்போது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இது குறித்து விவரித்த இயக்குநர் ஆனந்த், “எங்கள் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிவகார்த்திகேயன் சாருக்கு நாங்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம். இது எங்களுக்குப் பேருதவியாக இருந்தது. நிஜ வாழ்க்கையில் முழு மனதுடன் நட்பை மதித்து நண்பர்கள் நலனில் அக்கறை செலுத்தும் அவர் இதை வெளியிட்டது எங்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. கண்டிப்பாக இது எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு நேர்மறை சக்தியைத் தரும் என நம்புகிறோம்” என்றார்.
நட்பு குறித்த கதை என்பதால், ஆர்வ மிகுதியில் விளையாட்டுத்தனமாக சுற்றித் திரியும் நண்பர்கள் குழாமை காட்சிப்படுத்த நிறையவே வாய்ப்பு இருக்கிறதே… பத்தோடு பதினொன்றாக, கதையளக்கும் படமாக இருக்குமா அல்லது அதிலிருந்து மாறுபட்டிருக்குமா?  இது குறித்து இயக்குநர் ஆனந்த்தைக் கேட்டபோது, “நட்பு என்பது மகிழ்ச்சிக்கானது மட்டுமல்ல, அது நிபந்தனையற்ற பந்தம். ஒவ்வொருவரிடமும்,  குறிப்பாக பதின் பருவத்தினரிடையே நேர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. நாங்கள் ஏற்கெனவே வாழ்வின் பகுதி என்று டேக் லைனில் குறிப்பிட்டதைப்போல், இந்தப் படம் ஒவ்வொருவரையும் நட்பை நினைக்கச் செய்து மகிழ்ச்சியூட்டும்” என்று கூறுகிறார் இயக்குநர் ஆனந்த்.
 அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ இளம் பிராயத்தினரை கதைக் களமாகக் கொண்ட முழுமையான பொழுது போக்குப் படமாகும். குமாரவேல், டயானா வைஷாலினி, லீலா, ஆனந்த், பவானிஸ்ரீ, ஆர்.ஜே.விஜய், பூர்னேஷ், வில்ஸ்பட், இஃப்ரான், சபரீஷ், ஆர்.ஜே.ஆனந்தி, மோனிகா சின்ன கோட்லா, கே.பி.ஒய்.பாலா, குஹன், ஃபென்னி ஆலிவர், டி.எஸ்.ஆர்., வினோத், பூவேந்தன் மற்றும் சாய் வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கும் இப்படத்துக்கு ஏ.எச்.காஷிஃப் இசையமைக்க, தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார்.  ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு செய்ய, ராகுல் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். டி.ஐ.பொறுப்பை ஸ்ரீஜித் சாரங் ஏற்க, பூர்னேஷ் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். உடையலங்காரத்தை ப்ரீத்தி நாராயணனும், நடனப் பயிற்சியை அஸாரும் கவனிக்கின்றனர். மொஹமத் அக்ரம் சி.ஜி. பணிகளை மேற்கொள்கிறார். தி மெட்ராஸ் டச், ராயல் தர்மா புகைப்படக் கலைஞராகப் பணியாற்ற, ராஜேஷ் கண்ணா, மோகன், ஷெரீஃப், ஜெரோம் ரெமிஜியஸ், ஆர்.ஏ.சரத் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் இயக்குநர் குழுவில் இணைந்திருக்கின்றனர்.
Previous Post

நண்பர்கள் தினத்திற்கு சிம்புவின் குரலில் அதிரடியான ஆல்பம் பாடல்

Next Post

அப்சல்யூட் பிக்சர்ஸின் நல்வாழ்த்துகள்!’

Next Post
அப்சல்யூட் பிக்சர்ஸின் நல்வாழ்த்துகள்!’

அப்சல்யூட் பிக்சர்ஸின் நல்வாழ்த்துகள்!'

Popular News

  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.