• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மா சீதா நவமி’யை கொண்டாடும் வகையில், ‘ராம் சியா ராம்’ எனும் பக்தி உணர்வு மிக்க முன்னோட்ட இசையுடன் நடிகை கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் மோசன் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

by Tamil2daynews
April 29, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மா சீதா நவமி’யை கொண்டாடும் வகையில், ‘ராம் சியா ராம்’ எனும் பக்தி உணர்வு மிக்க முன்னோட்ட இசையுடன் நடிகை கிருத்தி சனோன் ஜானகியாக நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் மோசன் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

 

இந்திய வரலாற்றில் மிகவும் மதிக்கப்படும் பெண்மணிகளில் ஒருவரான சீதா தேவியின் பிறந்த நாளை இந்தியா முழுவதும் ‘மா சீதா நவமி’ என கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ‘ஆதி புருஷ்’ படக் குழுவினர், சீதா தேவியின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரத்யேக மோசன் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். அர்ப்பணிப்பு- தன்னலமற்ற தன்மை- துணிச்சல் மற்றும் தூய்மையின் பிம்பமாக திகழும் சீதாதேவியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கிருத்தி சனோன்  பிரத்யேகமாகத் தோன்றும் மோசன் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். மேலும் இதனுடன் ‘ராம் சியா ராம்..’ எனும் பக்தி கலந்த மெல்லிசையின் முன்னோட்டத்துடன் இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
ஸ்ரீராமராக நடித்திருக்கும் பிரபாஸிற்கு துணைவியாக ஜானகி எனும் சீதாதேவி கதாபாத்திரத்தில் நடிகை கிருத்தி சனோன் நடித்திருக்கிறார். மோசன் போஸ்டரில் இவரது தோற்றம், தூய்மை- தெய்வீகம் மற்றும் அந்த கதாபாத்திரத்தின் துணிச்சலையும் பிரதிபலிக்கிறார். மேலும் இதனுடன் ‘ராம் சியா ராம்’ எனும் பக்தி உணர்வு மிக்க மெல்லிசை ஒலிப்பது… ஸ்ரீராமர் மீது சீதாதேவி வைத்திருக்கும் அசைக்க இயலாத பக்தியினை துல்லியமாக வெளிப்படுத்துகிறது. இந்த மோசன் போஸ்டர், பார்வையாளர்களை ஆன்மீகம் மற்றும் பக்தி உணர்வு மிக்க உலகிற்கு அழைத்துச் செல்கிறது. மேலும் இந்த  பாடலை சச்சே- பரம்பரா எனும் குழுவினரால் இசைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிசன்குமார் ,ஓம் ராவத், பிரசாத் சுதார் இவர்களுடன் ரெட்ரோஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம், ஜூன் மாதம் 16ஆம் தேதி உலகளவில் வெளியிடப்படுகிறது.

 

Previous Post

மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்டது

Next Post

பொன்னியின் செல்வன் 2 – விமர்சனம்

Next Post

பொன்னியின் செல்வன் 2 - விமர்சனம்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.