• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இசைத் துறையில் முத்திரை பதிக்கும் சாம் சி.எஸ்.

by Tamil2daynews
July 31, 2020
in சினிமா செய்திகள்
0
இசைத் துறையில் முத்திரை பதிக்கும் சாம் சி.எஸ்.
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
 பத்து ஆண்டுகளுக்குள் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பல பாராட்டுக்குரிய படங்களைத் தந்து, இசையுலகில் தன் அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார். சிறந்த இசைப் பாடல்களை தந்ததோடல்லாமல், மிகச் சிறந்த பின்னணி இசையையும் வழங்கி, யூ ட்யுபின் ஓ.எஸ்.டி. ஜூக் பாக்ஸில் அதிக வரவேற்பு பெறும் இசைக் கலைஞராகவும் திகழ்கிறார். வெகுவாக பாராட்டப்பட்ட ‘விக்ரம் வேதா’ படத்தின் தனித்துவமான இசை, அவரது அழுத்தமான முத்திரைக்கு ஒரு பிராண்ட் நேம் கொடுத்திருப்பதுடன் மேலும் பல நல்ல படவாய்ப்புகளையும் தேடித் தந்திருக்கிறது.
இது குறித்து விவரித்த இசையமைப்பாளர் சாமி சி.எஸ். “திரைத் துறையைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கை காரணமாகத்தான் இந்த வெற்றி சாத்தியமானது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.  காரணம் அவர்கள்தான் எனது பணியை அங்கீகரித்து எண்ணற்ற ரசிகர்களிடம் நான் சென்றடைய உதவியவர்கள்.
தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எனது இசைப் பணியைப் பாராட்டி ஊக்குவித்ததை எனக்குக் கிடைத்த விலை மதிப்பற்ற பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்.  ரசிகர்களோ தங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே என்னைக் கருதுகிறார்கள். சமூக வலைதளங்களில் அவர்கள் போடும் பதிவுகள், ட்வீட்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் செய்திகளை எல்லாம் பார்க்கும்போது, சந்தோஷமாக இரு்க்கிறது என்று சொல்லி ஒரு புன்னகையுடன் சாதாரணமாக அதைக் கடந்து போய்விட முடியாதபடி என் கண்களை அவை ஈரமாக்குகின்றன. ரசிகர்களின் இந்த அன்பு மழை என்னை தெய்வீகத் தன்மையாக உணர வைக்கிறது. நேர்மறையான இந்த அதிர்வலைகள் மேலும் எனக்கு சக்தியையும் நம்பிக்கையையும் தருவதுடன், இன்னும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்ற பொறுப்பையும் அதிகப்படுத்துவதாக அமைந்திருக்கிறது” என்றார்.
பெரும் பொருட் செலவில், தயாரிப்பின் பல்வேறு படி நிலைகளில் இருக்கும் சுமார் ஒரு டஜன் படங்கள் தற்போது சாம் சி.எஸ். கைவசம் இருக்கின்றன. மாதவனின் ‘ராக்கெட்ரி’, அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம், ரெஜினா கேஸண்ட்ராவின் ‘சூர்ப்பனகை’, விஜய் சேதுபதியின் ‘800’, சசி குமாரின் ‘ராஜவம்சம்’, ஜெய் நடிக்கும் ‘எண்ணித் துணிக’, உதயநிதி ஸ்டாலினின் ‘கண்ணை நம்பாதே’, ‘மோச கல்லு’ தெலுங்குப் படம், ரவி தேஜாவின் பெயரிடப்படாத படம், ஹரீஷ் கல்யாண் நடிக்கும் நேரடித் தெலுங்குப் படம், புஷ்கர் காயத்ரியின் வெப் சீரிஸ் ஆகியவற்றுடன் வேறு சில படங்களும் சாம் சி.எஸ்.கைவசம் இருக்கின்றன.
Tags: SAM.CSசாம் சி.எஸ்
Previous Post

வீரப்பனைப் பற்றிய வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில்

Next Post

ஓடிடி தளத்தில் இளம் இயக்குநர்களுக்கு உருவாகும் வாய்ப்புகள்

Next Post
ஓடிடி தளத்தில் இளம் இயக்குநர்களுக்கு உருவாகும் வாய்ப்புகள்

ஓடிடி தளத்தில் இளம் இயக்குநர்களுக்கு உருவாகும் வாய்ப்புகள்

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன.

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் டைட்டில் வெளியீடு

April 16, 2026

‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம்

April 16, 2026

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட, கோபி நயினாரின் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

April 16, 2026

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

April 16, 2026

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட நன்றி விழா!

April 16, 2026

குற்றம் கடிதலைத் தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வரவிருக்கும் ‘குற்றம் கடிதல் 2!

April 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.