• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள்

தொடர்ந்து மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சி சீமான்…

by Tamil2daynews
October 9, 2021
in செய்திகள்
0
தொடர்ந்து மீனவர்களுக்காக குரல் கொடுக்கும் நாம் தமிழர் கட்சி சீமான்…
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
*கொச்சியில் கடலில் மூழ்கியுள்ள நாகை மீனவர்களது விசைப்படகை மீட்டெடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி
கொச்சி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்களது விசைப்படகு விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய செய்தியறிந்து கவலையுற்றேன். கடந்த மாத இறுதியில் நடைபெற்ற இவ்விபத்தின்போது நடுக்கடலில் மூழ்கித் தத்தளித்த அவ்விசைப்படகைச் சேர்ந்த 11 மீனவர்களும் மீட்கப்பட்டது பெரும் ஆறுதலைத் தந்தாலும் ஒன்றிய, மாநில அரசுகள் விசைப்படகை மீட்டெடுக்க எவ்வித அக்கறையும் காட்டாதது ஏமாற்றத்தைத் தருகிறது.
மீன்பிடித்தொழில் நலிவடைந்து, மீனவர்களது பொருளாதார இருப்பு கேள்விக்குறியாகி வரும் தற்காலச்சூழலில் ஒரு கோடி மதிப்பிலான விசைப்படகை இழப்பதென்பது அதனைச் சார்ந்திருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதித்திட வழிசெய்யும் பேராபத்தாகும். ஆகவே, இவ்விவகாரத்தில் மாநிலத்தை ஆளும் திமுக அரசும், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும் உரிய கவனமெடுத்து மூழ்கிய விசைப்படகினை மீட்டுத் தந்து, மீனவர்களது துயரத்தினைப் போக்கிட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Previous Post

சத்யஜோதி செந்தில் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாடு ஒலிம்பிக் போட்டியின் பொருளாளராக தேர்வு…

Next Post

Red Giant Movies Presents ‘Aranmanai 3’

Next Post
Red Giant Movies  Presents  ‘Aranmanai 3’

Red Giant Movies Presents 'Aranmanai 3'

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.