• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜெய் பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு

by Tamil2daynews
November 26, 2021
in சினிமா செய்திகள்
0
ஜெய் பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜெய் பீம் பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை வாழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு


தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.
முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என் எப் டி சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று வியாழக்கிழமை இரவு படத்தைத் திரையில் கண்டு ரசித்தார்.

 


படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு அவர்கள், நடிகர் சூர்யாவையும், படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் வெகுவாகப் பாராட்டினார். நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை நல்லக்கண்ணு பதிவு செய்தார்.
தமிழகத்தில் 1990களில் நடந்த பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காண்போரின் சிந்தையைத் தூண்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் ‘ஜெய் பீம்’. நீதிபதி சந்துருவின் வழக்காடு பயணத்தில் இருந்து நிறையவே ஈர்க்கப்பட்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு வழக்கறிஞராக, நீதிபதியாக நீதியரசர் சந்துரு தனது கடமையைச் செய்ய, நீதியை நிலைநாட்டு தன் எல்லைகளைத் தாண்டியும் எப்படிப் போராடினர் என்பதற்கான சாட்சி  ‘ஜெய் பீம்’.

இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் எழுதி, இயக்கியுள்ளார். படத்தில் சூர்யாவுடன், பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபிலோமின்ராஜ் எடிட்டராகவும், கலை இயக்குநராக கதிரும் பணியாற்றியுள்ளனர்.

நவம்பர் 2 ஆம் உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பிராந்தியங்களில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

அந்த வரிசையில், தற்போது ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்துவிட்டு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் த.செ.ஞானவேலுவையும் பாராட்டியுள்ளார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரின் பாராட்டு, நடிகர் சூர்யாவையும் ஜெய்பீம் படக்குழுவினரையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Previous Post

‘வாஸ்கோடகாமா’ படத்தின் பூஜை !

Next Post

ஆறு மொழிகளில் உருவாகும் ‘மட்டி’ திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது!

Next Post
ஆறு மொழிகளில் உருவாகும் ‘மட்டி’ திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது!

ஆறு மொழிகளில் உருவாகும் 'மட்டி' திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாகிறது!

Popular News

  • பெண்களின் பாதுகாப்பிற்காக “எதற்கும் துணிந்தவன்”  விமர்சனம்

    ரீ-என்ட்ரி கொடுக்கும் காம்னா ஜெத்மலானி

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களுக்கு பெருமை சேர்த்த நடிகர் கார்த்தி..!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்ற சிறப்பு பெற்ற ‘நெடுநல்வாடை’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.