• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மாயா படப்புகழ் இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில், லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா  நடிக்கும் திரைப்படம் “Connect” ! 

by Tamil2daynews
November 19, 2021
in சினிமா செய்திகள்
0
மாயா படப்புகழ் இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில், லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா  நடிக்கும் திரைப்படம் “Connect” ! 
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
Rowdy Pictures சார்பில், விக்னேஷ் சிவன் வழங்கும், மாயா படப்புகழ் இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில், லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா  நடிக்கும் திரைப்படம் “Connect” !
லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாரா தொட்டதெல்லாம் பொன்னாகும் பெருமைக்கு சொந்தக்காரராக வலம் வருகிறார். அவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றியின் பொன்மகுடத்தை  சூடி வருகின்றன. பல வித்தியாசமான களங்களில், மாறுபட்ட பாத்திரங்களில் தோன்றி நடிப்பது மூலம், தொடர் வெற்றிப்படங்களை தருவது,  நயன்தாரா அவர்களின் வழக்கமாக மாறிவிட்டது. அவரது மாறுபட்ட முயற்சிகள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் இதன் மூலம் இந்தியாவில் நாயகியை முதன்மை பாத்திரமாக வைத்து உருவாகும் படைப்புகளுக்கு முன்னோடியான பாதையை வகுத்தவராகவும் அவர்  விளங்குகிறார்.
நயன்தாரா திரைவாழ்வில் மைல்கல்லாக அமைந்த இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில் உருவான “மாயா” படம்,  நயன்தராவின் அற்புதமான நடிப்பிற்காகவும், அழுத்தமான கதைக்காகவும் பரபர திரைக்கதைக்காகவும் பெரும் புகழ் பெற்றது. இந்த வெற்றிக்கூட்டணியான நயன்தாரா மற்றும் இயக்குநர் அஷ்வின் சரவணன்  மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். “Connect” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை Rowdy Pictures சார்பில், விக்னேஷ் சிவன் தயாரிக்கின்றனர். பரபர தருணங்கள் நிறைந்த ஹாரர் திரில்லராக உருவாகவுள்ள இப்படம் ரசிகர்களுக்கு புத்தம் புதிய சினிமா அனுபவத்தை தரும். இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள்  பலர் இப்படத்தில் பங்குகொள்கிறார்கள். பாலிவுட் பிரபலமான  அனுபம் கெர், நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்
தமிழ் சினிமா இயக்குநர்களில்  நம்பிக்கையூட்டும் திறமைசாலிகளில் ஒருவராக தன் இடத்தை பதிவு செய்திருக்கும் அஸ்வின் சரவணன் இந்தப் படத்தை இயக்குகிறார். மேலும் காவ்யா ராம்குமாருடன் இணைந்து கதையும் எழுதியுள்ளார். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பைக் கையாள்கிறார். கலை இயக்கத்தை ஸ்ரீராமன் & சிவசங்கர் கவனிக்கின்றனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் M (Sync Cinema) ஆகியோர் ஒலி வடிவமைப்பு செய்கின்றனர். ராஜகிருஷ்ணன் M.R (சவுண்ட் மிக்ஸ்), “ரியல்” சதீஷ் (ஸ்டண்ட்ஸ்), அனு வர்தன் & கவிதா J (ஆடைகள்), சிதம்பரம் (மேக்கப்), சினேகா மனோஜ், அஸ்தா பிசானி (புரோஸ்தெடிக் கலைஞர்கள்), Realworks Studios (VFX), வர்ஷா வரதராஜன் (நடிகர் தேர்வு), கோமளம் ரஞ்சித் (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைனர்) தொழில்நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். சுரேஷ் சந்திரா – ரேகா  D one  (மக்கள் தொடர்பு), Ra. சிபி மாரப்பன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), குபேந்திரன் V.K (அசோஸியேட் புரடியூசர்), மயில்வாகனன் K.S (இணைத் தயாரிப்பாளர்).
Previous Post

சிம்பு கொடுத்த வேலையை நூறு சதவீதம் திருப்தியாக செய்துள்ளேன்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

Next Post

ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் ! 

Next Post
ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் ! 

ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் ! 

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.