ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

என் டி ஆர் 30 திரைப்பட படக்குழு மிகப்பிரமாண்டமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது !

by Tamil2daynews
May 21, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

என் டி ஆர் 30 திரைப்பட படக்குழு மிகப்பிரமாண்டமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது !

 

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும்  படங்களில் ஒன்றான என்.டி.ஆர்.30 படத்தில், இயக்குநர் கொரட்டாலா சிவா “ஜனதா கேரேஜ் (2016)” படத்துக்குப் பிறகு என்.டி.ஆர். தாரக்குடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். RRR படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு அனைவரது பார்வையும் என்.டி.ஆர் – கொரட்டாலா சிவா படத்தின் மீதுதான் உள்ளது. “இது ஒரு உணர்ச்சிகரமான கதைகளத்துடன், மிகவும் சக்திவாய்ந்த திரைக்கதை கொண்டது” என்று இயக்குனர் கொரட்டாலா சிவா ஒரு  பேட்டியின் போது கூறியுள்ளார்.

கொரட்டாலா சிவா, ஜூனியர் என்டிஆரின்  என்டிஆர் 30க்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். என்டிஆர் நடித்த படத்தை லைம்லைட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதால், படத்தின்  எந்த ஒரு  அம்சத்தையும் அவர் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

என்டிஆர் பிறந்தநாளில் என்டிஆர் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் இருக்கும் என்று சமீபத்தில் இயக்குனர் கொரட்டாலா சிவா தெரிவித்தார். ரசிகர்களின் கொண்டாட்ட  பெருநாள் இன்று விடிகிறது, சமூக ஊடகங்களில் ரசிகர்களின் வெறித்தனம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து வருகிறது.
ரசிகர்களின் ஆவலை கூட்ட, என்டிஆர் 30இன், தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான  மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டரில் என் டி ஆர் கர்ஜனை குரலில் மாஸ் டயலாக்கை பேச, அனிருத் தனது நரம்பு துடிக்கும் பின்னணி இசையில் அதிரவைக்கிறார். எமோஷனுக்கான வசனங்களை உச்சரிப்பதில் என்.டி.ஆர் சிறந்து விளங்குபவர் என்பது அனைவரும் அறிந்ததே. என்டிஆர் 30 படத்தின் கதைக்கருவை சித்தரிக்க,  கொரட்டாலா சிவா என்டிஆர் குரலை கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார்.

இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் மற்றும் ஒளிப்பதிவாளராக R.ரத்னவேலு ISC ஆகியோரின் கூட்டணியில் இந்த திரைப்படம் மிகப்பிரமாண்டமானதாக மாறியுள்ளது. புகழ்மிகு கலை இயக்குனர் சாபு சிரில் மற்றும் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோரும் தொழில்நுட்ப குழுவில் உள்ளனர்.

கொரட்டாலா சிவா மற்றும் என்டிஆர் கூட்டணி  இணைந்து முன்பு  ‘ஜனதா கேரேஜ்’ என்ற பிளாக்பஸ்டர் படத்தை தந்தனர். அப்படம் ஒரு சக்திவாய்ந்த சமூக கருத்துடன் வெகுஜன ஆக்சன் கமர்ஷியலை வழங்கியது. இந்த முறையும், இந்த கூட்டணி  மிகப்பெரிய அளவில் ஒரு பொழுதுபோக்கு ஆக்சன்  திரைப்படத்தை தருவது உறுதி.

இப்படத்தை NTR Arts,  நிறுவனம் சார்புல் நந்தமுரி கல்யாண் ராம் வழங்க, Yuvasudha Arts சார்பில் மிக்கிலினேனி சுதாகர் மற்றும் ஹரிகிருஷ்ணா K தயாரிக்கின்றனர்.

Previous Post

காதலிலும் வெற்றி, திருமணத்திலும் வெற்றி, உற்சாக உச்சியில் ஆதி, நிக்கி கல்ராணி..!

Next Post

RRR நாயகன் ஜீனியர் என் டி ஆர், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் NTR31 படத்தின் போஸ்டர் வெளியானது !

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

RRR நாயகன் ஜீனியர் என் டி ஆர், கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் NTR31 படத்தின் போஸ்டர் வெளியானது !

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “யானை” திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • 1980 கலாகட்டத்தில் நடக்கும் காதல் கதை“ பூவே போகாதே “

    6 shares
    Share 6 Tweet 0
  • ”என் இனிய தனிமையே முதல் பாடல் இன்று வெளியீடு”

    0 shares
    Share 0 Tweet 0
  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!