
காதல் எக்காலத்திலும் மாறாத உணர்வு. எப்போதும் உலகின் ஆதாரமாக, புதுமையாக உலகின் இயக்கமாக இருப்பது காதல் தான். சினிமாவில் எக்காலத்திலும் காதல் கதைகளுக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. தமிழில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஃபிரஷ்ஷான, இளமை ததும்பும் காதல் கதையாக உருவாகியுள்ளது “ஓ மை கடவுளே” படம். அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடிக்கும்.

இத்திரைப்படம் இதில் இணைந்திருக்கும் மற்ற நடிகர் பட்டாளத்தால் மேலும் மேலும் எதிர்பார்ப்பை குவித்து வருகிறது. இளைஞர்கள் விரும்பும் வாணி போஜன், சாரா இணைந்திருக்கும் இப்படத்தில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் விதமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார். காதல் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெளியான குறைந்த காலத்திலேயே மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை புரிந்திருக்கிறது.

https://youtu.be/DFcNDqr_J14