• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

*நடிகராகவும் முத்திரை பதிக்கும் பிரபல பாடகர் வேல்முருகன்*

by Tamil2daynews
September 28, 2021
in சினிமா செய்திகள்
0
*நடிகராகவும் முத்திரை பதிக்கும் பிரபல பாடகர் வேல்முருகன்*
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கடந்த 13 வருடங்களாக பல வெற்றிப் பாடல்களை பாடி நாட்டுப்புறம் மற்றும் திரைப்பட பாடல்களில் தனக்கென தனியிடம் பிடித்துள்ள பாடகர் வேல்முருகன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
இதுவரை ஏறக்குறைய 500 திரைப்படங்களுக்கு மேல் வேல்முருகன் பாடியுள்ளார். மதுர குலுங்க குலுங்க, ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், வேணாம் மச்சான் வேணாம், சங்கிலி புங்கிலி கதவ தொற, போட்டது பத்தலை, கத்திரி பூவழகி, ஒத்த சொல்லால, சண்டாளி, அட கருப்பு நிறத்தழகி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை அவர் பாடியுள்ளார்.
இது மட்டுமின்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாட்டுப்புற பாடகர் என்ற பெருமையும் வேல்முருகனுக்கு உண்டு. அது வரை வேல்முருகனின் குரலை மட்டும் கேட்ட மக்களுக்கு வேல்முருகனின் முகமும் பரிச்சயம் ஆனது.
கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வேல்முருகன் வென்றுள்ளார். இதை தவிர, 5,000 நாட்டுப்புற கலைஞர்களை வைத்து கின்னஸ் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். நாட்டுப்புற பாடல்களுக்காக வேல்முருகன்
முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி உள்ளிட்ட படங்களில் பாடல்களில் மட்டுமே இதுவரை நடித்து வந்த வேல்முருகன் தற்போது குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக வலம் வர உள்ளார். இவர் ஏற்கனவே கவுண்டமணி நடிப்பில் வெளியான ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.
ப்ரஜின் நடிக்கும் சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி, மிர்ச்சி சிவா நடிப்பில் சலூன்,  படைப்பாளன், அன்னக்கிளி ஆர்கெஸ்ட்ரா, யோகி பாபுவுடன் இன்னும் பெயரிடப்படாத படம் ஆகிய பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் பாடல்கள் பாடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். வேலன், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
நடிகராக வேல்முருகனின் சமீபத்திய புகைப்படங்கள் பலரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளன. “இனி பாடல், நடிப்பு ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்துவேன். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். பாடகராக எனக்கு அங்கீகாரம் அளித்தது போல், நடிகனாகவும் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. எனது குரலை ஏற்றுக்கொண்டதுப்  போல் எனது நடிப்பையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று வேல்முருகன் கூறுகிறார்.
Previous Post

அறிமுக இயக்குநர் அரவிந்த் குமரன் இயக்கியுள்ள ‘இயல்’ குறும்படத்துக்கு சர்வதேச விருது!

Next Post

யாஷிகா ஆனந்த் நடித்த ” பெஸ்டி” திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.

Next Post
யாஷிகா ஆனந்த் நடித்த ” பெஸ்டி” திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.

யாஷிகா ஆனந்த் நடித்த " பெஸ்டி" திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.

Popular News

  • ‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • 18 படங்களில் நடித்தாலும் ‘லப்பர் பந்து’ தான் எனக்கு முதல் படம் போல ; நகைச்சுவை நடிகர் டிஎஸ்கே

    0 shares
    Share 0 Tweet 0
  • வீரமே வாகை சூடும் – திரை விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பிரேர்ணா அரோராவின் அடுத்த பான் இந்தியா திரைப்படம் அக்டோபரில் தொடங்குகிறது… கதாநாயகனாக கிரண் அப்பாவரம் நடிக்க, இயக்குநராக ஸ்ரீகாந்த் புப்பாலா அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.