• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

யாஷிகா ஆனந்த் நடித்த ” பெஸ்டி” திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.

by Tamil2daynews
September 28, 2021
in சினிமா செய்திகள்
0
யாஷிகா ஆனந்த் நடித்த ” பெஸ்டி” திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.
0
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனம் ஓம் முருகா படப்புகழ் அசோக் குமார் மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த ” பெஸ்டி ” திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் கௌரவ வேடத்தில் லொள்ளுசபா ஜீவா நடித்துள்ளனர்.
ஜே.வி. இசையையும், ஆனந்த் கேமராவையும், கோபி படத்தொகுப்பையும், சுரேஷ் நடனப்பயிற்சியையும், அருள்குமரன் இணைத்தயாரிப்பையும்  கவனித்துள்ளனர்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் குறிப்பா கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலும்  வளர்ந்துள்ள இப்படத்தை சாரதிராஜா தயாரித்துள்ளார்.
படத்தின் கதை, திரைக்கதை , வசனம் , எழுதி இயக்கி உள்ள ரங்கா படத்தைப் பற்றி கூறியதாவது:- ” இளமை துள்ளலுடன் திகிலும் மர்மமும் நிறைந்த படமாக உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்தில் திகில், மர்மத்துக்கு புதிய பரிமாணத்தை காட்டியிருக்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தபிறகு தான் யாஷிகா ஆனந்த் விபத்தில் சிக்கினார். அவர் இதில் கிளாமர் மட்டுமல்ல நடிப்பிலும் அசத்தி இருக்கிறார்.
இந்தப் படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு விண்ணப்பித்தோம். அதில் டொராண்டோ தமிழ் இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் ஆனந்துக்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதினை பெற்றுத்தந்தது.
அடுத்து அமெரிக்காவில் நடைபெற்ற லாஸ் விகாஸ் திரைப்பட விழாவில் யாஷிகா ஆனந்துக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது..
கொல்கத்தாவில் நடைபெற்ற ‘விர்ஜின் ஸ்பிரிங் திரைப்பட விழாவில் இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள அசோக் அவர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த முறையில் கதை சொல்லல், ‘சிறந்த திரைக்கதை அமைத்தல், சிறந்த இயக்கம் என “பெஸ்டி” படத்தை எழுதி இயக்கிய எனக்கு மூன்று விருதுகள் கிடைத்தது.
மேலும் பல்வேறு திரைப்பட விழாக்களில் போட்டியில் கலந்துகொள்ளவும் தேர்வாகி உள்ளது.
“பெஸ்டி” திரைப்படம் எனக்கு மட்டுமல்ல இதில் பணியாற்றியுள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் மிகச்சிறந்த புகழினையும், பாராட்டினையும், விருதுகளையும் பெற்றுத்தரும். விரைவில் திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்துவருகிறோம்..” என்று கூறினார்.
Previous Post

*நடிகராகவும் முத்திரை பதிக்கும் பிரபல பாடகர் வேல்முருகன்*

Next Post

இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன்

Next Post
இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன்

இந்திய திரையுலகில் கால் பதிக்கும் உலகப்புகழ் வரலாற்று நாயகன்

Popular News

  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டாய்ரா’ படத்தில் எதிரெதிர் பக்கங்களில் நீதியைத் தேடும் கரீனா கபூர் கான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தி கிராண்ட் மாஸ்டர்’… கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • என்ன விலை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “என்ன விலை திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவம் கொடுக்கும்” -நடிகை நிமிஷா சஜயன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புரொடக்ஷன் No.1 (Production No.1) – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

September 17, 2026

நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

September 17, 2026

‘பாரத ரத்னா’ எம் எஸ் சுப்புலட்சுமியின் சுய சரிதையான ‘எம் எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்- M.S. : A LEGACY ON SCREEN ‘ திரைப்படத்தின் தொடக்க விழா

September 17, 2026

‘கன்னடத்து பைங்கிளி’ படத்திற்காக டி. ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா

September 17, 2026

‘பத்தா’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!

September 17, 2026

‘தி டார்க் ஹெவன்’. – விமர்சனம்

September 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.