• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வதந்திக்கு முற்றுப்புள்ளி: காதலரை அறிமுகப்படுத்தி ப்ரியா பவானி சங்கர்

by Tamil2daynews
January 27, 2020
in சினிமா செய்திகள்
0
வதந்திக்கு முற்றுப்புள்ளி: காதலரை அறிமுகப்படுத்தி  ப்ரியா பவானி சங்கர்
0
SHARES
47
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காதல் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன் காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

‘மான்ஸ்டர்’ படத்தைத் தொடர்ந்து, ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘பொம்மை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலித்து வருவதாகச் செய்திகள் பரவியது. பலரும் இது தொடர்பாகச் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். ‘அவர் எனக்குத் தோழி’ என்று எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்தும் சிலர் செய்திகளை வெளியிட்டு வந்தனர்.

இதனிடையே, தனது காதலரை இன்ஸ்டாகிராம் பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். இவரது பெயர் ராஜ். ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார். ராஜுவின் பிறந்த நாளை முன்னிட்டு ப்ரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பத்து வருடத்துக்கு முன்னால் கல்லூரியில் மிக சந்தோஷமாக, தன்னம்பிக்கையுடன், குறைந்த கவர்ச்சியும், சுமாரான தோற்றமும் கொண்ட என்னை நீ காதலிக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இல்லை.

ஆனால் (இன்று) எல்லாவற்றையும் தாண்டி இன்றும் என்னுடன் நீ இருக்க விரும்புவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். தனது உடைந்த பாகங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கும் ஒருவருடன் இருப்பது அவ்வளவு மகிழ்ச்சியைத் தராது. நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை.

எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன். நட்சத்திரங்கள் நிறைந்த என் உலகத்தில் நீ மட்டுமே சூரியன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

Tags: Priya Bhavani Shankarப்ரியா பவானி சங்கர்.
Previous Post

திட்டமிட்டபடி ஜனவரி 31 சந்தானம் – யோகி பாபுவின் ” டகால்டி ” ரிலீஸ் தயாரிப்பாளர் அறிவிப்பு

Next Post

Robinhood Motion Poster

Next Post
Robinhood Motion Poster

Robinhood Motion Poster

Popular News

  • ரூம்பாய் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • திமுக பிரமுகரின் காம லீலைகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.