• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டாப்ஸிக்கு ஆங்கில குரல் கொடுத்த நடிகை பிரியாலால் ! “அன்னா பெல்லே சேதுபதி”

by Tamil2daynews
September 19, 2021
in சினிமா செய்திகள்
0
டாப்ஸிக்கு ஆங்கில குரல் கொடுத்த நடிகை பிரியாலால் ! “அன்னா பெல்லே சேதுபதி”
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் சேதுபதி, டாப்ஸி  நடித்த “அன்னா பெல்லே சேதுபதி” ஒ டி டி பிளாட்ஃபாமில்  வெளியானது. படத்தில், வெளிநாட்டு பெண் வேடம் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார், டாப்சி.  அதிலும், ஆங்கில உச்சரிப்பில் டாப்சி பேசும் அழகு அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் உயிரூட்டியது. அந்த குரலுக்கு  உயிரூட்டியவர், தென்னிந்திய  நடிகை  பிரியா லால்.
ஆம், சுசீந்திரன் இயக்கிய ஜீனியஸ் மற்றும் தெலுங்கில் ராம் கோபால் வர்மாவின் உதவியாளர் மோகன் இயக்கிய ” குவா கோரின்கா “(Love Birds) ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்த அதே பிரியாலால் தான் டாப்சிக்கு ஆங்கிலத்தில் குரல் கொடுத்துள்ளார்.


இந்த கதா பாத்திரத்திற்காக பல நடிகைகள் மற்றும்  டப்பிங் கலைஞர்களை  வரவழைத்து டப்பிங் செய்து பார்த்தனர் . ஆனால் எந்த குரலும்  பிரிட்டிஷ் பாணியில் உச்சரிப்புடன் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை.  அந்த வேளையில் தான்  வெளிநாட்டு பெண்ணான பிரியலால் குறித்தும் அவரது குரல் வளம் மற்றும் துல்லியமான ஆங்கில உச்சரிப்பு பற்றியும்  தெரியவந்தது. ஆனால் தமிழ் -தெலுங்கு பாடங்களில் ஹீரோயினாக நடித்து வரும் அவர் டப்பிங் பேச சம்மதிப்பாரா என்ற சந்தேகம் பட குழுவினருக்கு. இருந்தாலும் படத்தின் தன்மை உணர்ந்து  பட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்கி பிரியாலால் குரல் கொடுக்க ஒப்பு குரல் கொடுத்துள்ளார்.
பிரியாவின் குரல், அவ்வளவு துல்லியமாக பிரிட்டிஷ் பாணியில் பேசி அசத்தியதை படத்தின் இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் மற்றும் அனைவரும் பாராட்டினார்கள். இப்பொழுது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

துபாயிலுள்ள ராசல் கைமாவில் பிறந்து  லண்டனில் படித்து வளர்ந்த பிரியா லாலுக்கு நடிப்பும் நடனமும் தான் உயிர் மூச்சு. தமிழ் , மலையாளம், தெலுங்கு படங்களில் ஹீரோயினாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்திய பிரியா லால், ஹீரோயினாக நடிக்கும் தனது அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். நடிப்புன் மீது இருக்கும் ஆர்வத்தால் தமிழில் சொந்த குரலில் பேசி நடிப்பதற்காக தமிழ் மொழியும் கற்று கொண்டுள்ளார். லண்டன் வாசியாக இருந்த பிரியா லால் கொச்சியில் தங்கி கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

Previous Post

பிரபல இயக்குனர் சற்குணம் வழங்கும் நகைச்சுவை திரைப்படம் ‘ சூ மந்திரகாளி’

Next Post

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி என் இயக்கத்தில் ஃபேண்டசி காமெடி படமாக உருவாகும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’

Next Post
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி என் இயக்கத்தில் ஃபேண்டசி காமெடி படமாக உருவாகும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி என் இயக்கத்தில் ஃபேண்டசி காமெடி படமாக உருவாகும் 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'

Popular News

  • டங்கி : ஷாருக்கானின் ரசிகர்கள் மேள தாளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து மும்பை கெயிட்டி கேலக்ஸியில் முதல் நாள் முதல் காட்சியை காணத் தொடங்கினர். இது தொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது தொடர்பாக ஷாருக்கான் குறிப்பிடுகையில், ”நண்பர்களே மற்றும் தோழிகளே.. நல்ல நிகழ்ச்சிக்கு நன்றி” என தெரிவித்திருக்கிறார்.‌

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.