• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குனர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் கதை திருட்டு புகார்

by Tamil2daynews
March 29, 2021
in சினிமா செய்திகள்
0
இயக்குனர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் கதை திருட்டு புகார்
0
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றசாட்டு சுமத்தியுள்ளார் இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்
கொரானா ஊரடங்கின்போது என்னை தொடர்பு கொண்ட துணை நடிகர் மற்றும் இயக்குனருமான சரவணஷக்தி படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், பணஉதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்”மீன் வாங்கி கொடுப்பதை காட்டிலும் மீன்பிடிக்க கற்றுகொடுப்பது சிறப்பானது” என்கிறகொள்கையுடையவன்நான்
அதனால் நான்ஒரு கதை சொல்கிறேன் அதற்கு திரைக்கதை அமைத்து தாருங்கள் அதற்காக
 50,000 ம் ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறினேன் அதற்கு சரவண சக்தி  சம்மதித்தார்
“எல்லாம் அவன் செயல்”
“பைரவா” படங்கள் பாணியில் மருத்துவ கல்லூரி மாணவியை அந்த கல்லூரி உரிமையாளர், மற்றும் தாளாளர் இருவரும் கற்பழித்து கொலை செய்துவிடுகிறார்கள்
அந்த பெண் நாயகனின் தங்கை நாயகன் சாதாரண ஆள்.
எனவே ஆக்க்ஷன் அடிதடி என்று இல்லாமல் தன்னுடைய புத்திசாலிதனத்தால் தங்கையின் மரணத்திற்கு காரணமானவர்களை கொலை செய்து பழி வாங்குகிறான்
சட்டத்தாலும், நீதியாலும் அவனை நெருங்க கூட முடியாது என்ற ஒருவரி கதை இதற்கு திரைக்கதை அமைத்து அதற்கு” எங்க குலசாமி” என தலைப்பு வைத்து தயார் செய்து தாருங்கள் என கூறி பணமும் அனுப்பி வைத்தேன்
என்னிடம் ஒப்புக்கொண்டபடி திரைக்கதை அமைத்து தரவில்லை அதன் பின்னர் நான் கூறிய ஒருவரி கதையை எனக்கு தெரிந்த வேறு ஒரு குழுவிடம் கொடுத்து திரைக்கதை அமைக்க சொல்லி அதனை வைத்து தற்போது படம் தயாரிக்கும் முயற்சி மும்முரமாக நடந்துவருகிறது
படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியிடப்பட்டு பரபரப்பை உருவாக்கியுள்ளது கதையின் கருவும் விவாத பொருளானது இந்த நிலையில் 27.03.2021 அன்று சாலிக்கிராமத்தில் உள்ள என் அலுவலகத்திற்கு சில அடியாட்களுடன் மதுபோதையில் வந்த சரவண சக்தி ஊழியர்களை அநாகரிகமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
அலுவலகஊழியர்கள் சரவண சக்தி வகையறாக்களுக்கு தெரியாமல் விருகம்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் காவல்துறையினர் வருவதற்கு முன்பு சிங்காரவேலனை கொலை செய்து தலையுடன் தான் செல்வேன்
என்று கொக்கரித்துக் கொண்டிருந்த சரவண சக்தி வகையறா காவல்துறை வாகனத்தை பார்த்தவுடன் பின்னங்கால் பிடரி தெறிக்க அருணாச்சலம் சாலையில் ஓட்டம் பிடித்ததை சாலையில் சென்றுகொண்டிருந்தமக்கள் வேடிக்கை பார்த்தனர்
காவல்நிலையத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்தபோது சரவண சக்தி அலைபேசியை எடுக்கவில்லை இன்று மீண்டும் தொடர்பு கொண்டபோது தான் மதுரையில் இருப்பதாக கூறியவரிடம் நாளை( 29.03.2021) காலை 10 மணிக்கு கண்டிப்பாக விசாரணைக்கு காவல்நிலையம் வரவேண்டும் என்ற ஆய்வாளரின் உத்தரவுப்படி வர உள்ளார்
சரவண சக்தி.
இவர் ஏதோ என் மீது புகார் கொடுக்கப்போவது போன்று நாளை (29.03.2021) காலை பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது
சரவண சக்தி ஏற்கனவே இயக்கி வெளியான நாயகன் படம்,” ஸ்பீடு” என்கிற ஹாலிவுட் படத்தின் உல்டாவாகும் “பில்லா பாண்டி” படத்தின் கதையும் மூர்த்தி என்பவர் எழுதியதாகும் அவரது மேற்பார்வையில் இவர் இயக்கிய படமாகும் என்கிறது கோடம்பாக்க வட்டாரம்
இதன்மூலம் சரவண சக்திசொந்தமாக கதை தயார் செய்து படம் இயக்கும் திறமை இல்லாதவர் அடுத்தவன் கதையை இரவல் வாங்கியோ அல்லது திருடியோ படம் இயக்குபவர் என்பதை புரிந்துகொள்ளலாம்
“எங்க குலசாமி” என்கிற படத்தின் கதை என்னுடையது என்பதையும் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் சம்பவத்தை அடிப்படையாக கொண்டது இதனால் அவரது பெயருக்கு எந்த களங்கத்தையும், அவப்பெயரையும்என் திரைக்கதை
ஏற்படுத்தாது என்று  நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் அவர்களிடம் உறுதிமொழி கடிதம் கொடுக்கப்பட்டு முறைப்படி அனுமதி கடிதம் பெறப்பட்டுள்ளது
இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து என் தரப்பு நியாயங்களை, அதற்குரிய ஆவணங்களை முன்வைத்து வெற்றிபெறுவேன் என்பதை உறுதிபட தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்
Previous Post

Fipola On Wheels fresh meat food trucks launched by Fipola Retail India in Chennai

Next Post

பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்!

Next Post
பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்!

பிரச்சாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த பெண்!

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு… ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

August 4, 2026

சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!

August 4, 2026

விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடலில் அனல் பறக்க விடும் சூர்யா

August 4, 2026

விஜய் ஆண்டனியின் உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.