• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“The Hide ( UN )learn” ரம்யா நம்பீசன் இயக்கத்தில் முதல் குறும்படம் !

Ramya Nambeesan’s directorial incarnation with short video

by Tamil2daynews
February 15, 2020
in சினிமா செய்திகள்
0
“The Hide ( UN )learn” ரம்யா நம்பீசன் இயக்கத்தில் முதல் குறும்படம் !
0
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நடிகை ரம்யா நம்பீசன் திரையில் நடிகையாக மட்டுமல்லாமல் திரையின்  பல பக்கங்களை, எப்போதும் முயன்று பார்ப்பவர். ஒரு பக்கம் பாடகராகவும்  கலக்கிவரும்  அவர், சமீபத்தில் இணையத்தில் கால்பதித்து YouTube தளத்தில் தனக்கென தனி ஒரு சேனலை “Ramya Nambeesan Encore” எனும் பெயரில் ஆரம்பித்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சேனலில் தனது இயக்கத்தில் முதல் குறும்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். The Hide ( UN )learn  எனும் அந்த குறும்படம் இப்போது ரசிகர்களிடம் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இந்த சேனலில் பதிவேற்றப்பட்டிருக்கும் முதல் வீடியோவான இந்தக்குறும்படம் சமூகத்தில் பெண்களின் வாழ்வை,  பிரச்சனைகளை, அதற்கான தீர்வை பேசுகிறது.

இது குறித்து நடிகை ரம்யா நம்பீசன் கூறியதாவது…

“Ramya Nambeesan Encore” என இணையம் வழி தொடங்கியிருக்கும் எனது இந்தப் பயணம் என் மனதுக்கு நெருக்கமானது. உலகில் உள்ள அனைவருடனும், எனது அன்பை, உணர்வை பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. எனது பார்வையை, எனது உலகத்தை, புதுபுது ஐடியாக்களை, பல புதுமையான விஷயங்களை முயன்று பார்க்க மிகப்பெரும் சுதந்திதரம் இந்த Youtube தளத்தின் மூலம் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த தளத்திற்காக முதல் வீடியோவாக  The Hide ( UN ) learn எடுக்க ஆரம்பித்தேன்.  இது இயக்குநராக எனது முதல் முயற்சி. இந்த வீடியோ இன்றைய நவநாகரீக உலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை, இந்திய சமூகத்தில் அவர்களின் நிலையை சொல்லக்கூடியது. இந்த வீடியோ எனது முதல் படைப்பாக தமிழுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட எனது Youtube தளத்தில் வெளியானது எனக்கு பெரும் மகிழ்ச்சி.  இந்த வீடியோ வழக்கமானா வீடியோ போல் வெறும் பிரச்சனைகளை மட்டுமே பேசக்கூடிய ஒன்று அல்ல. இறுதியில் பிரச்சனைகளுக்கான  தீர்வை பற்றி விவாதிக்கவும் செய்வதாக இருக்கும். எனது இந்த Youtube தளம் இது போல் குறும்படஙகள் மட்டுமல்லாது, பாடலகள், நடனம் மற்றும் கலைவடிவங்கள் பலவற்றையும் முயற்சிக்கும்  ஒன்றாக இருக்கும் என்றார்.

Ramya Nambeesan Encore N Poetic Stories தயாரித்துள்ள
“The Hide ( UN ) learn “ வீடியோவை ரம்யா நம்பீசன் கருவாக உருவாக்கி, தன் குரலில் விவரித்து,  இயக்கியுள்ளார். மேலும் தொழில்நுட்ப கலைஞராக மட்டுமல்லாமல் ஸ்ரிதா ஷிவதாஸ் உடன் இணைந்து இந்த வீடியோவில் நடித்துள்ளார். பத்ரி வெங்கடேஷ் இந்த வீடியோவிற்கு வசனம் எழுதியுள்ளார். நீல் சுன்னா ஒளிப்பதிவு செய்ய ரோஜின் தாமஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ரம்யா நம்பீசனின் சகோதரர் ராகுல் சுப்பிரமணியம் இந்த வீடியோவிற்கு இசையமைத்துள்ளார்.

Tags: Ramya Nambeesan
Previous Post

பயணங்கள் முடிவதில்லை’ படத்தலைப்பு ‘தாய்நிலம்’ ஆக மாறியது

Next Post

சாதி வெறிக்கு எதிரான படம் ” எட்டுத்திக்கும் பற “

Next Post
சாதி வெறிக்கு எதிரான படம் ” எட்டுத்திக்கும் பற “

சாதி வெறிக்கு எதிரான படம் " எட்டுத்திக்கும் பற "

Popular News

  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது ஃபஹத் ஃபாசிலின் “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” – Don’t Trouble The Trouble’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.