• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

தமிழர்களுக்கு இயக்குனர் தங்கர் பச்சானின் வேண்டுகோள்!

by admin
January 26, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
தமிழர்களுக்கு இயக்குனர் தங்கர் பச்சானின் வேண்டுகோள்!
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஒவ்வொரு நாளும் அதிகாலையில் கண் விழிக்குக்கும் போதே  படுக்கையில்  கிடக்கும்  கைப்பேசியைத் தான் முதலில்  தேடுகின்றோம். கையில் எடுத்த வேகத்தில் யார் யார் நமக்கு என்ன  செய்தி அனுப்பி உள்ளார்கள் என்ற ஆவலில் காலை வணக்கம், good morning  போன்ற வாழ்த்து செய்திகளை படித்து விட்ட பிறகுதான் படுக்கையை விட்டு எழுகிறோம்.
அப்படி நாம் படிக்கும் வாழ்த்து செய்திகளில் என்ன தான் உள்ளது? யாரோ எழுதிய வாசகங்கள், யாரோ உருவாக்கிய படங்கள்,  வெளிநாட்டு மனிதர்களின்  படங்கள் என்று வரிசைகட்டி நிற்கின்றன.
3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்களை உடைய நம்  மொழியில்
படித்தவர்கள் ஆகிய நாம் நம் வாழ்நாள் முழுவதுமே அதிகபட்சமாக ஆயிரத்திற்கும் குறைவான தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்தி வாழ்கின்றோம். படிக்காத  மக்களிடம் மட்டுமே தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
பத்தாயிரம் ஆண்டுகளாக போற்றி, காப்பாற்றப்பட்டு வளர்த்து வந்த  தமிழ்மொழி கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளில் பயன்பாட்டில்  அழிந்து தேய்ந்து  குறைந்துவிட்டது.
நம்முடைய தலைமுறையே 1000 சொற்களுக்குள் அடங்கி விட்ட நிலையில் நமது அடுத்த தலைமுறை 500 சொற்கள் அதற்கு அடுத்த தலைமுறை 200, 100 சொற்கள்  என்று  பயன்பாட்டில் குறைந்துகொண்டே வந்து விடும்.
அண்மையில் வெளியான கூகுல் பிபிசி ஆய்வின்படி உலகளவில் அதிக  வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொள்வது இந்தியர்கள்தான் என்றும், அதிலும் குறிப்பாக தமிழர்கள் தான்  என்றும் ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
இந்த வாழ்த்துச் செய்திகளில் உள்ள எதை எதையோ பகிர்வதை விட்டு விட்டு நாமே  சிந்தித்து நம் கைகளால் ஒரு வெள்ளைக்காகிதத்தில் எழுதி படமெடுத்து அனுப்பத் தொடங்கும்  பொழுது நம்முடைய தமிழ் மொழியானது என்றும் நிலைத்து நிற்கும்.
நம்முடைய எழுதும் பழக்கத்தினால் மூளையில் சிந்திக்கும் சொற்களை  கைகளால் அந்த வெள்ளை காகிதத்தில் எழுதும் பொழுது சிந்தனை ஆற்றலானது தூண்டப்படுகிறது.
இதன் மூலம் நம்மிலிருந்து மறைந்த, புதைந்து கிடக்கும் அழிந்து போன நம்முடைய சொற்கள் மீண்டும் நம்முடைய பயன்பாட்டுக்கு  வரும்.
இதனை ஒவ்வொரு தமிழர்களும் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.
Tags: thangar Bachanதங்கர் பச்சான்
Previous Post

அனைவரின் கவனத்தை ஈர்த்த ‘ஒரு மயிரும் இல்ல’!

Next Post

கபடி வீரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா!

Next Post
கபடி வீரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா!

கபடி வீரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா!

Popular News

  • விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி!

    விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு கட்டிடம் கட்டிக் கொடுத்த விஜய் சேதுபதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • அறுவடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு கிளப்பி உள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • PK7 Studios தயாரித்து வழங்கும் “ஜாக்கி”

    0 shares
    Share 0 Tweet 0
  • நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்- திரையில் நீங்கள் கேமை தொடங்கலாம் ஆனால் ஒருபோதும் அது முடிவதில்லை’ டிரெய்லர் வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஸ்ரீகாந்த் ஒதேலா – “தி பாரடைஸ்” படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!

September 27, 2025

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

September 27, 2025

இதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!

September 27, 2025

இயக்குநராக களமிறங்கிய தியா சூர்யா !!

September 27, 2025

பல்டி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

September 27, 2025

STR 49: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலம்பரசன் டி.ஆர் – வெற்றிமாறன் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது!

September 27, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.