• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சிஷ்யனை இயக்கும் குரு: ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் ‘சுப்ரமணி’

by Tamil2daynews
January 2, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சிஷ்யனை இயக்கும் குரு: ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின் நடிக்கும் ‘சுப்ரமணி’

 

‘பிரியமுடன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் ‘சுப்ரமணி’.

தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் பரபரப்பான கிரைம் திரில்லரான  ‘சுப்ரமணி’ திரைப்படத்தில் இயக்குநர் செல்வாவின் உதவியாளராக தளபதி விஜய் நடித்த ‘யூத்’ மற்றும் ஜித்தன் ரமேஷ் நடித்த ‘ஜித்தன்’ திரைப்படங்களில் பணியாற்றிய மிஷ்கின் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டி என்கிற நட்ராஜன் சுப்பிரமணியம் முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘சுப்ரமணி’ திரைப்படம் குறித்துப் பேசிய இயக்குநர் ஆர் கே செல்வா, “இப்படத்தில் மிஷ்கினை இயக்கியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதுவரை ஏற்றிராத மிக முக்கிய கதாபாத்திரத்தை அவர் இப்படத்தில் ஏற்று நடித்துள்ளார், அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் என்னுடைய உதவி இயக்குநராகவே மீண்டும் மாறி அவர் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சில காட்சிகளையும் அவர் இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் ரிஷி மற்றும் நட்டியும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். ஐந்து கொடூர கொலை சம்பவங்களை மூன்று காவல் அதிகாரிகளின் பார்வையில் வெவ்வேறு கோணங்களில் அணுகி இந்த படு பாதக சம்பவங்களை செய்யும் இருண்ட அரக்கனை மேலும் குற்ற சம்பவங்கள் நிகழ்வதற்குள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை விவரிக்கும் வகையில் திரைக்கதையை இப்படத்தில் அமைத்துள்ளோம். வித்தியாசமான கதைக்களங்களை எப்போதும் வரவேற்கும் தமிழ் ரசிகர்கள் இப்படத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

ஆர் கே செல்வா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ‘சுப்ரமணி’ திரைப்படத்தில் பிரணவ் மற்றும் பாலாஜி ப்ராஜெக்ட் ஹெட் ஆகவும் இணை தயாரிப்பாளர்கள் ஆகவும் பணியாற்றியுள்ளனர். அப்சல் பெய்க் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஆவார். தயாரிப்பு நிர்வாகி: எம். ஜெ. பாரதி
தெலுங்கு பிக்பாஸ் புகழ் திவ்யா ‘சுப்ரமணி’ படத்தின் நாயகியாக நடித்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ் புகழ் ஜாஸ்பர், லொள்ளுசபா சுவாமிநாதன் இப்படத்தில் நடித்துள்ளனர். அகிலேஷ் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணன் ‘சுப்ரமணி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். ‘ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்’ புகழ் சனுக்யா இசையமைக்க அஸ்மின் பாடல்களை எழுதியுள்ளார். படத்தொகுப்பை டான் மேக்ஸின் உதவியாளரான சுஜிர் பாபு கையாள சண்டை பயிற்சிக்கு ராம்போ விமல் பொறுப்பேற்றுள்ளார். எஃபக்ட்ஸ்: சேது, விஎஃப்எக்ஸ்: சுனில் (69 ஷேட்ஸ்), டிசைன்ஸ்: குமரன் கே, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆர் கே செல்வா (வின்சென்ட் செல்வா) இயக்கத்தில் மிஷ்கின், ரிச்சர்ட் ரிஷி, நட்டி நடிக்கும் ‘சுப்ரமணி’ திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடும் பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

Previous Post

RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ – 2026 கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகவிருக்கிறது!

Next Post

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது

Next Post

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ் ( With Love )” திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது

Popular News

  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் “An Ordinary Man” திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – இயக்குநராக தன் புதிய பயணத்தை தொடங்கும் ரவி மோகன் ; நகைச்சுவை நாயகனாக யோகி பாபு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விநாயகர் சதூர்த்தி தினத்தில், விகாஷ் நடித்த “துச்சாதனன்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.