மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் படத்தின் நாயகன் ராக்கிங் ஸ்டார் யஷ் அந்த படத்தில் பேசிய, “சக்தி வாய்ந்த மனிதர்கள் சக்தி வாய்ந்த இடங்களை உருவாக்குகிறார்கள்” என்கிற வசனத்திற்கு ஏற்ப மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் எம்எஸ் கோல்டின் இரண்டாவது கிளையை துவங்கி வைத்துள்ளார் யஷ். அவரைக் கண்டதும் அங்கே திரண்டிருந்த கூட்டத்தினர் உற்சாக ஆவாரம் செய்தனர். சந்தேகமே இல்லாமல் உலகத்தில் உள்ள மக்கள் அனைவராலும் நிச்சயமாக நேசிக்கப்படும் ஒரு மனிதர் தான் யஷ் என யாரும் எளிதாக சொல்ல முடியும்.
அனு இமானுவேல் மற்றும் மிருணாளினி ரவி உள்ளிட்ட நடிகைகள் ஏற்கனவே எம் எஸ் கோல்டின் பிரதான கிளைக்கு வருகை தந்திருந்தனர்.
கபாலி, விஐபி 2, மகா, வலிமை உள்ளிட்ட பல வெற்றி படங்களை தனது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் மூலமாக தயாரித்தும் விநியோகித்தும் வரும் டத்தோ மாலிக், எம்எஸ் கோல்டு நகைக்கடைகளின் தொடர் சங்கிலியை மலேசியாவில் துவங்கியுள்ளார்.
தற்போது சிறப்பாக வியாபாரத்தை நடத்தி வரும் எம்எஸ் கோல்டு கோலாலம்பூரில் துவங்கப்பட்ட முதல் நகைக்கடை என்பது குறிப்பிடத்தக்கது.
எம்எஸ் கோல்டு என்பது ஆடம்பரமான மற்றும் விலைமதிப்பற்ற நகைகளை கொண்ட ஒரு முதன்மையான இடமாகும். கலை அம்சத்துடனும் தொழில்நுட்பத்துடனும் தயாரிக்கப்பட்டுள்ள சிறந்த நகை வகைகளை வாடிக்கையாளர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் தேர்ந்தெடுக்க முடியும். கோலாலம்பூரில் ஜலன் மஸ்ஜித் பகுதியில் நகை ஆர்வலர்களுக்கும் நகை பற்றிய அறிவுத்திறன் கொண்டவர்களுக்கும் ஒரு இணையில்லாத ஷாப்பிங் அனுபவத்தை தரும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் ரசனைகளுக்கு ஏற்றார்போல, பல்வேறு விதமான வடிவங்களில் ஆபரணங்களை விரும்புபவர்களுக்காக, மிகவும் நேர்த்தியாக ஆபரண வகைகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கடை நளினமான, நுட்பமான ஆபரணங்களை விரும்புவர்கள் செல்லக்கூடிய இடமாக இருக்கின்றது.
ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனிப்பட்ட கவனத்துடனும் மற்றும் விதிவிலக்கான சேவையுடனும் வரவேற்கப்பட்டு ஒரு ஆடம்பரமான சோலைக்குள் இருக்கும் ஒரு அற்புதமான சூழலை எம்எஸ் கோல்டு தருகிறது. ஒவ்வொருவருக்கும் அவரவரின் தனித்துவமான ஸ்டைலுக்கும் மற்றும் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை கொண்டாடுவதற்கும் ஏற்ற அவர்களுக்கு தேவையான ஆபரண வகைகளை எளிதில் கண்டுகொள்ளும் விதமாக, வரும் வாடிக்கையாளர்களுக்கு அறிவார்ந்த மற்றும் நட்பான பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் தங்கள் உதவியை வழங்குகின்றனர்.
நிச்சயதார்த்த மோதிரங்கள், திருமண காப்புகள், நெக்லஸ், பிரேஸ்லெட், காதணிகள் மற்றும் கடிகாரங்கள் என விதவிதமான திகைப்பூட்டும் ஒரு மிகப்பெரிய ஆபரணத் தொகுப்பை தன்னிடத்தை கொண்டுள்ளது எம்எஸ் கோல்டு. அதிகபட்ச துல்லியத்துடனும் சிறந்த பொருட்களைக் கொண்டு மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆபரணமும் கலைத்திறனுடனும் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் அதேசமயம் தங்களது பிராண்டை வரையறுக்கும் விவரங்களுக்கு கவனம் கொடுத்தும் உருவாக்கப்பட்டுள்ளது..