யெல்லோ – விமர்சனம்
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார். தற்போது ‘யெல்லோ’ (Yellow) என்ற திரைப்படத்தின் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
கோவை பிலிம் பேக்டரி சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூர்ணிமா ரவியுடன், வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, லீலா சாம்சன், டெல்லி கணேஷ், பிரபு சாலமன், வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆனந்த் காசிநாத் மற்றும் கிளிஃபி கிரிஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அபி ஆத்விக் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீ வாட்சன் படத்தொகுப்பு செய்ய, கார்த்திக் கிருஷ்ணன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். பரணி அழகிரி மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

நிச்சயமாக இது நாயகியை முன்னிறுத்தியுள்ள படம் என்பதால் முதலில் பூர்ணிமா ரவியின் நடிப்பைப் பற்றி சொல்லவேண்டும். வீக்-ஆக இருக்கும் மனநிலையை முகத்தில் வெளிப்படுத்தும் கலையைச் சிறப்பாகச் செய்துள்ளார். கதையை முழுதாக உள்வாங்கி எல்லாக் காட்சிகளிலும் கவனம் பெறுகிறார் பூர்ணிமா ரவி. நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்தால் நிச்சயமாக கவனம் குவிப்பார். நாயகன் வைபவ் முருகேசன். கேரக்டரிலே ஒரு பாசிட்டிவ் வைப் இருப்பதை உணர்ந்து படமெங்கும் நேர்மறை வைப்லே இருக்கிறார். அது நமக்கு ஈசியாக கனெக்ட் ஆகிறது. வாழ்த்துகள் சகோ. ஏனைய கேரக்டர்களில், நமிதா கிருஷ்ணமூர்த்தி டெல்லி கணேஷ், பிரபு சாலமன் உள்பட அனைவருமே கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக் படத்தின் இன்னொரு ஹீரோ. ஆகச்சிறப்பான ப்ரேமிங்கால் நம்மை அசரடித்துள்ளார். ஆனந்த் காசிநாத்தின் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவைப்படும் இடங்களில் எல்லாம் கச்சிதமாக இசைத்துள்ளது. சிப்பி கிரிஷின் இசையில் எல்லாப் பாடல்களும் ஒகே ரகம். சில பாடல்கள் டபுள் ஒகே ரகம்
“உன்னை வீக் ஆக்குற பவரை இன்னொருத்தருக்கு கொடுக்காத”
“ஒரு டைம்ல வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா நம்ம வாழ்க்கையில நாமளே இருக்க மாட்டோம்.. So find your self” போன்ற கச்சிதமான வசனங்களால் ஒரு ரைட்டராக ஈர்த்துவிடுகிறார் இயக்குநர் ஹரி மகாதேவன். பூர்ணிமாவின் பயணத்தின் தேவையை இன்னும் ஸ்ட்ராங்காக திரைக்கதை வழிநின்று உணர்த்தியிருக்கலாம். சில காட்சிகள் கூறியதையே கூறியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டன.
வாழ்வு என்பது தேங்கி நிற்பதல்ல.. கடந்து செல்வது. நாமும் நின்றுவிடக்கூடாது. எல்லாவற்றையும் கடந்து செல்ல வேண்டும். அப்படிச் செல்பவர்களால் மட்டுமே தன்னை வெல்ல முடியும். தன்னை வென்றால் தான் வாழ்வை வெல்ல முடியும் என்ற அழகான விசயத்தைச் சொன்னதற்காக குறைகள் மறந்து யெல்லோவிற்கு ஹெல்லோ சொல்லலாம்.









