• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராது இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் பெப்சி வி.எஸ். பாலமுரளி வழங்கும், இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘வலை’ திரைப்படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடிகர் அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்!

by Tamil2daynews
February 7, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ராது இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் பெப்சி வி.எஸ். பாலமுரளி வழங்கும், இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘வலை’ திரைப்படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடிகர் அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்!

 

அனைத்து வயது ரசிகர்களையும் கவரும் நடிகராக அதர்வா முரளி அடுத்தடுத்து நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் பாராட்டப்பட்ட ‘DNA’ திரைப்படத்திலும், சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்திலும் அதர்வாவின் திறமையான நடிப்பு பாராட்டப்பட்டது. இப்போது, முதல் முறையாக ‘வலை’ திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார் அதர்வா முரளி. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ’நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களை இயக்கிய ஜீவா சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

திரைப்படம் குறித்து இயக்குநர் ஜீவா சங்கர் கூறுகையில்,
“ராமேஸ்வரத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த திரைப்படம் சரா மற்றும் குட்டி என இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றி நகர்கிறது. இந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் அதர்வா முரளி நடித்துள்ளார். முழுக்க முழுக்க மீனவர் சமூகத்தின் வாழ்க்கை முறையை பேசும் படமாக இது இல்லாமல் பழிவாங்கல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூபா மஞ்சரி மற்றும் வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முரளி ஷர்மா, ஆடுகளம் நரேன், அர்ஜாய், ஜெயபிரகாஷ், அருள் டி. சங்கர், துளசி, மயில்சாமி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள நான்கு பாடல்களும் சிறப்பாக உருவாகியுள்ளன. அந்தமான், சென்னை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் தலா ஒரு பாடலை படமாக்கியுள்ளோம்” என்றார்.
அதர்வா முரளியின் ஆக்‌ஷன், க்ரைம் த்ரில்லர் 'வலை' விரைவில் வெளியாகிறது! – Cinema Murasamஇந்த பழிவாங்கல் கதை மற்ற படங்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது என்று இயக்குநர் ஜீவா சங்கர் பகிர்ந்து கொண்டதாவது,
“இதற்கான காரணம் தனித்துவமானது. ‘பழிவாங்கல் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வா?’ என்ற கேள்வியை மையமாக வைத்து கதையை படமாக்கியுள்ளோம். கெட்ட மனிதர்கள் செய்யும் அநியாயங்களுக்கு எதிரான பதிலடி கூட பழிவாங்கலாக மாறுமா என்பதையும் பேசுகிறோம். இந்த விஷயங்களை எல்லாம் அறிவுரையாக இல்லாமல் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் சுவாரஸ்யமான திரைக்கதையாக உருவாக்கியுள்ளோம். படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படம் பார்வையாளர்களை மகிழ்விப்பதுடன், ஒரு நல்ல கருத்தையும் எடுத்துச் செல்லும். இதற்கு முன்பு ராமேஸ்வரம் பின்னணியில் பல படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய மற்றும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்” என்றார்.

திரைப்படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பு நிறுவனம்: ராது இன்ஃபோடெயின்மெண்ட்,
தயாரிப்பாளர்: பெப்சி வி.எஸ். பாலமுரளி,
இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: இயக்குநர் ஜீவா சங்கர்,
படத்தொகுப்பு: சதீஷ் சூர்யா,
கலை இயக்கம்:சண்முகராஜா,
தயாரிப்பு வடிவமைப்பு: கோபி பிரசன்னா,
சண்டை பயிற்சி: ஸ்டன்னர் சாம்,
பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, மோகன்ராஜ் மற்றும் வாமனா

Previous Post

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

Next Post

‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

Next Post

‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

Popular News

  • ரைட் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழிலும் 28 கோடி வசூலித்து சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’

    0 shares
    Share 0 Tweet 0
  • நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களை கைப்பற்றிய அனிமல் திரைப்படம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • மதுரை மணிக்குறவன்  இசை வெளியீடு…

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ரெட் லேபில் – விமர்சனம்

February 7, 2026

‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

February 7, 2026

ராது இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் பெப்சி வி.எஸ். பாலமுரளி வழங்கும், இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘வலை’ திரைப்படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடிகர் அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்!

February 7, 2026

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

February 7, 2026

₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை!

February 7, 2026

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ’லெகஸி’ களத்தையும் அதன் குழுவினரையும் 2026ஆம் ஸ்லேட் ஷோகேஸில் அறிமுகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ்!

February 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.