• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ரெட் லேபில் – விமர்சனம்

by Tamil2daynews
February 7, 2026
in விமர்சனம்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரெட் லேபில் – விமர்சனம்

 

95 காலகட்டத்தில் காலேஜ் சேர்மன் தேர்தலுக்காக நடக்கும் போட்டியினை வைத்து உருவாகி இருக்கும் அதர பழைய கதை தான் ‘ரெட் லெபில்’ ஆனாலும் திரைக்கதையின் மூலம் லைட்டாக தூசி தட்டி இருக்கிறார் இயக்குனர் .

கல்லூரி காலத்தில் அடிதடி, போலீஸ் வழக்கு என்று இருந்த நாயகன் லெனின், கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அனைத்தையும் விட்டுவிட்டு, தொழில், காதல் என்று அமைதியாக வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் தனது கல்லூரியில் நடைபெறும் மாணவர்கள் தலைவர் தேர்தலில் பயணிக்க கூடிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார். அடிதடியை தவிர்த்துவிட்டு அமைதியான முறையில் பயணிக்க வேண்டும் என்ற முடிவுடன் மீண்டும் கல்லூரிக்குள் வரும் லெனின்,  கல்லூரி வளாகத்திற்குள் வைத்து ஒருவரை கொலை செய்து விடுகிறார். ஏற்கனவே சில குற்ற வழக்குகள் இருக்கும் நிலையில், கொலை குற்றத்திலும் சிக்கினால் எதிர்காலம் வீணாகிவிடும் என்பதால், குற்றத்தில் இருந்து தப்பிக்க, தனது காதலியான அந்த கல்லூரி மாணவியின் உதவியோடு ஒரு திட்டம் போடுகிறார்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரை தேடி கல்லூரி வளாகத்திற்குள் போலீஸ் வருவதோடு, அவரது ஆட்களும் தேட தொடங்குகிறார்கள். இவர்களை தாண்டி லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி தப்பித்தாரா?, அவர் யாரை, எதற்காக கொலை செய்தார்? என்பதை பரபரப்பாக சொல்வதே

‘ரெட் லேபில்’.

நாயகனாக நடித்திருக்கும் லெனின், அறிமுக நடிகர் என்ற அடையாளமே தெரியாதவாறு சிறப்பாக நடித்திருக்கிறார். கல்லூரி மாணவர் மற்றும் கல்லூரியை முடித்த காலக்கட்டம் என்று தோற்றத்திலும், நடிப்பிலும் வேறுபாட்டை காட்டுவதற்காக அதிகம் மெனக்கெட்டிருப்பது திரையில் தெரிகிறது.

நாயகிக்கு ஏற்ற தோற்றம் இல்லை என்றாலும் அளவான நடிப்பு மூலம் தனது பணியை நிறைவாக செய்திருக்கும் அஸ்மின், திரைக்கதையில் முக்கியத்துவத்தோடு பயணித்து, இறுதியில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.

காமெடி கலந்த வில்லத்தனத்தின் மூலம் கவனம் ஈர்க்கும் இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

முனீஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார்கள்.

குறிப்பிட்ட ஒரு லொக்கேஷனில் கதை நகர்ந்தாலும், வெவ்வேறு கோணங்கள் மூலம் காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன்.

கைலாஷ் மேனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், அனைத்து அம்சங்களையும் அளவாக கொடுத்து, படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றிருக்கிறார்.

கல்லூரி வாழ்க்கை மற்றும் காதல் பின்னணியில், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை மிக நேர்த்தியாக எழுதிருக்கும் பொன்.பார்த்திபன், பல திருப்பங்கள் மூலம் இறுதி வரை சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதையை கையாண்டிருக்கிறார்.

ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில், புதுமுகங்களை வைத்துக்கொண்டு, எந்த இடத்திலும் தொய்வின்றி படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் கே.ஆர்.வினோத், கொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக நாயகன் மேற்கொள்ளும் திட்டம் தொடர்பான காட்சிகளை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.
ஒரு கல்லூரிக்குள் கதை நடந்தாலும், காட்சிகளின் வடிவமைப்பு மூலம் வெவ்வேறு கோணத்தில் படத்தை நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குநர் கே.ஆர்.வினோத், எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் இரண்டாம் பாதி முழுவதையும் படு சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்று, பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறார்.

மற்ற கல்லூரி கதை  படங்களை பார்க்கும் பொழுது இந்த படம் ஓகே ரகம் தான்.

ரேட்டிங் – 3 / 5
Previous Post

‘கூஸ்கோர் பண்டட்’ திரைப்படம் தொடர்பாக இயக்குநர், தயாரிப்பாளர் நீரஜ் பாண்டேவின் அதிகாரப்பூர்வ அறிக்கை!

Next Post

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

Next Post

சரத்குமார் நடிக்கும் 'ஆழி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

Popular News

  • மிடில்கிளாஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தை தாதா87 ,பிட்ரூ படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி யின் புதிய படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அசாமில் கொட்டும் மழையில் மக்களுக்கு உதவிவரும் அபி சரவணன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • புதுமுக இயக்குநருக்கு இளையராஜா அறிவுரை!

    0 shares
    Share 0 Tweet 0
  • செல்வராகவன் இயக்கத்தின் மீதும், எழுத்தின் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு – நடிகர் சூர்யா

    3 shares
    Share 3 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.