• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

by Tamil2daynews
February 7, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi’) படத்தின் படப்பிடிப்பு நிறைவு : ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி  ( Dijo Jose Antony)  இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி 2018 ஆம் ஆண்டில் ‘குயின் – (Queen) படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்டான ‘ஜன கன மன’ ( Jana Gana Mana) படத்தை இயக்கியிருந்தார். அதற்குப் பிறகு ‘மலையாளி ஃபிரம் இந்தியா’ ( Malayalee From India) எனும் திரைப்படத்தையும் இயக்கினார். அழுத்தமான சமூகம் சார்ந்த கருத்துக்களை மெயின் ஸ்ட்ரீம் சினிமாவில் சொல்ல முடியும் என்பதையும் நிரூபித்தார். அத்துடன் இயக்குநர் டிஜோ – சமகால மலையாள திரையுலகத்தில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்துள்ளார். பள்ளிச்சட்டம்பி அவரது திரைப்பயணத்தில்  முக்கியமான படமாக அமைகிறது.மேலும் இது அவரது இயக்கத்தில் வெளியாகும் முதல் பீரியாட்டிக் ஃபிலிம் என்பதால்.புதிய வகைகளையும், சினிமாவின் பரிமாணங்களை ஆராய வேண்டும் என்ற அவரது இலக்கையும் பிரதிபலிக்கிறது.

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஷிகார் ‘( Shikkar) எனும் ஒரே படத்தின் மூலம் தனது திறமைக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெற்ற திரைக்கதை ஆசிரியர் எஸ். சுரேஷ் பாபு – ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். அவருடைய செழுமை மிக்க சினிமா பயணத்தில் மோகன்லால் – மம்மூட்டி – ஜெயராம் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கும், ஷைன் டாம் சாக்கோ ( Shine Tom Chacko) சௌபின் ஷாஹிர் ( Soubin Shahir) மற்றும் விநாயகன் போன்ற புதிய தலைமுறை நடிகர்களுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்.
தொடர்ந்து வெற்றி படங்களையும் , இசை பட்டியலில் முதலிடம் பிடிக்கும் பாடல்களையும் வழங்கி வரும் ஜேக்ஸ் பிஜாய் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 1950 – 60 கால கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் மூலம் ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) இடமிருந்து மற்றொரு வெற்றிகரமான இசை ஆல்பத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

‘பள்ளிச்சட்டம்பி’ ஒரு பீரியட் சினிமா என்பதால் ஆடை வடிவமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கேரள மாநில அரசின் விருது பெற்ற மஞ்சுஷா ராதாகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். பல மொழிகளில் படங்களை தொகுத்த அனுபவம் கொண்ட ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஒளிப்பதிவை டிஜோ டோமி கையாண்டுள்ளார்.

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் (Worldwide Films)  நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நௌஃபல் ( Noufal) மற்றும் பிரிஜீஷ் ( Brijeesh )ஆகியோருடன் சி கியூப் ப்ரோஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் (C Qube Bros Entertainment)  சார்பில் தயாரிப்பாளர் சானுக்யா – சைதன்யா சரண் ஆகியோரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள் டொவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றாத வகையில் புதிய தோற்றத்தில் காணப்படுவார். இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட ஐந்து இந்திய மொழிகளில் வெளியாகிறது.

Previous Post

₹120 கோடி AP–TG ஒப்பந்தம்: தில் ராஜுவின் ( Dil Raju’s)SVC-யுடன் யாஷ் & KVN-ன் டாக்ஸிக் திரைப்பட ஒப்பந்தம், வரலாற்றுச் சாதனை!

Next Post

ராது இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் பெப்சி வி.எஸ். பாலமுரளி வழங்கும், இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘வலை’ திரைப்படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடிகர் அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்!

Next Post

ராது இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிப்பில் பெப்சி வி.எஸ். பாலமுரளி வழங்கும், இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘வலை’ திரைப்படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக நடிகர் அதர்வா முரளி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ் – The Paradise ‘ படத்தின் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் ‘தேடியே போறேன்…’ பாடல் ஹிப் ஹாப் ஆதி மற்றும் டி.இமான் ஆகியோரால் வெளியிடப்பட்டது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பாம்பாட்டம்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.