ஒரு திரைப்பட ஆல்பத்திற்காக முதல்முறையாக வெளியான ‘மூன்வாக் மினி கேசட்’ ( Moonwalk Mini Cassette ) — ஒரு சிறப்பு இசை அனுபவம் !!
Behindwoods Productions நிறுவனம், மூன்வாக் படத்தின் மினி கேசட்டை யூடுயூபில் வெளியிட்டுள்ளது. இது ஒரு திரைப்படத்திற்காக தமிழ் திரையுலகில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு தனித்துவமான இசை அனுபவமாகும். மூன்வாக் திரைப்படத்தின் அனைத்து 5 பாடல்களையும் A R ரஹ்மான் பாடியுள்ளார். இது அவரது இசைப் பயணத்தில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மூன்வாக் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு முழுநீள திரைப்படம் இதுபோன்ற ஒரு இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவது இதுவே முதல் முறை.
ஏ.ஆர். ரஹ்மானின் காலத்தால் அழியாத இசை, பிரபுதேவாவின் நடன மாயாஜாலம் மற்றும் மனோஜின் சினிமா உருவாக்கம் — இவை அனைத்தும் ஒன்றிணைந்து, மூன்வாக் திரைப்படம் அனைத்து தலைமுறையினரையும் கவரக்கூடிய ஒரு முக்கியமான இசை திரைப்படமாக அமைந்துள்ளது.
“மூன்வாக் ஒரு முழுநீள நகைச்சுவை திரைப்படம். ஆனால் அதே சமயம், இதில் இசை, பாடல் உருவாக்கம் மற்றும் நடன அமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய திரைப்படத் துறையின் இரண்டு மிகப் பெரிய ஆளுமைகளை ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, மீண்டும் ஒன்றாக இணைத்துள்ளது.”
மினி கேசெட் மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், மூன்வாக் திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.









