• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் இருண்ட உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் காஜல் அகர்வால் –ஷ்ரேயாஸ் தல்படே நடித்த “தி இந்தியா ஸ்டோரி” டிரெய்லர் வெளியானது!!

by Tamil2daynews
July 20, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் இருண்ட உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் காஜல் அகர்வால் –ஷ்ரேயாஸ் தல்படே  நடித்த “தி இந்தியா ஸ்டோரி”  டிரெய்லர் வெளியானது!!

 

பூச்சிக்கொல்லி விவசாயத்தின் கொடூரமான உண்மையை அம்பலப்படுத்தும் “தி இந்தியா ஸ்டோரி ” ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

உண்மைக்காக போராடும் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே – “தி இந்தியா ஸ்டோரி” டிரெய்லர் வெளியீடு !

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  நடித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்” படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பூச்சிக்கொல்லி விவசாயம் மற்றும் அது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் பரவலான தாக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், அன்றாடம் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை முன்வைக்கிறது. மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணரும் இந்தப் படம், தீவிரமான கதை, சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய செய்தி ஆகியவற்றின் மூலம் தைரியம், நீதி மற்றும் விடாமுயற்சியின் பயணத்தை சித்தரிக்கிறது.

Zee Studios  வழங்க, MIG Production நிறுவனம்  இணைந்து உருவாகியுள்ள “தி இந்தியா ஸ்டோரி” படத்தை சேட்டன் DK இயக்கியுள்ளார். சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், 2026 ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம், ஆழமாக  சிந்திக்க வைக்கும் கருத்தை,  நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க உள்ளது.
டிரெய்லர் குறித்து இயக்குநர் சேட்டன் டி.கே. கூறியதாவது..,
“தி இந்தியா ஸ்டோரி என்பது ஒரு திரைப்படம் மட்டுமல்ல; நாம் அவசியமாக நடத்த வேண்டிய ஒரு உரையாடல். ஒவ்வொரு வீட்டையும் அமைதியாக பாதித்து வரும் ஒரு முக்கிய பிரச்சினையை இந்தக் கதையின் மூலம் வெளிச்சம் போட்டு காட்ட விரும்பினோம். உண்மை, தைரியம் மற்றும் விடாமுயற்சியின் சக்திவாய்ந்த பயணத்தை டிரெய்லர் வெளிப்படுத்துகிறது. இது பார்வையாளர்களை சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும், நம்மைச் சுற்றியுள்ள நிதர்சனத்தை உணரவும் தூண்டும் என்று நம்புகிறோம்.”

நடிகை காஜல் அகர்வால் கூறியதாவது..,
“தி இந்தியா ஸ்டோரி படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு மிகவும் அர்த்தமுள்ள அனுபவமாக இருந்தது. மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டாலும் உண்மைக்காக போராடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதுவே இந்தப் படத்தின் சிறப்பாகும். டிரெய்லர் பார்வையாளர்களை கவர்ந்து, இந்த சக்திவாய்ந்த கதையை பெரிய திரையில் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.”

நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே கூறியதாவது..,
“தி இந்தியா ஸ்டோரி படத்தின் உணர்வுப்பூர்வமான மையத்தை டிரெய்லர் மிகச்சரியாக வெளிப்படுத்துகிறது. நம்பிக்கையும் உறுதியும் கொண்ட ஒரு சாதாரண மனிதன், அசாதாரணமான சவாலுக்கு எதிராக போராடும் கதையிது. இதன் உணர்வுகளும், கருத்தும் ரசிகர்களை நிச்சயம் சென்றடையும் என்று நம்புகிறேன். ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் அனைவரும் இந்தப் படத்தை அனுபவிப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர்களாக ஸ்வாதி  விநாயக் சைந்தானி,அனிதா ஜாதவ்,விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி   ஆகியோர் உள்ளனர். ஒளிப்பதிவை நிஷாந்த் பகவத், இசையை மங்கேஷ் தாக்டே  , படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, பாடல் வரிகளை ஷகீல் அசாமி, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே கவனித்துள்ளனர்.

Previous Post

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel) பாடலை வெளியிட்ட டி-சீரிஸ்! (T Series)

Next Post

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

Next Post

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய 'அமரன்' – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.