• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜீவா நடிக்கும் ‘சீறு’!

by Tamil2daynews
December 2, 2019
in சினிமா செய்திகள்
0
ஜீவா நடிக்கும் ‘சீறு’!
3
SHARES
120
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இசையமைப்பாளர் டி.இமான் புதிய திறமைகளை கண்டுபிடித்து இசையுலகுக்கு அறிமுகப்படுத்தி, வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் ஆர்வம் மிக்கவர். அவரது ஆச்சரியப்படத்தக்க சமீபத்திய கண்டுபிடிப்புதான் திருமூர்த்தி. ஜீவா நடிக்கும் ‘சீறு’ படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமாகும் திருமூர்த்தி, இனிய குரல் வளமும் திறமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அருமையான இசை வடிவல் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை பார்வதி எழுதியிருக்கிறார். இது குறித்து பார்வதி தெரிவித்ததாவது…


“பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ற பாடல்களை இதுவரை நான் எழுதியிருக்கிறேன். ஆனால் ‘சீறு’ படத்துக்காக எழுதிய பாடலை விசேடமான அனுபவம் என்றுதான் கூற வேண்டும். திறமை மிக்க அறிமுக பாடகர் திருமூர்த்தி பாடிய இந்தப் பாடலை நான் எழுதியிருப்பதை எனக்குக் கிடைத்த கெளரவமாகவே நினைக்கிறேன். ‘ஜில்லா’ படத்துக்காக இமான் இசையில் நான் எழுதிய “வெரசா போகயிலே…” பாடலுக்குப் பிறகு இப்போது மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறேன்.


பாடலுக்கான சூழலை இயக்குநர் ரத்தின சிவா என்னிடம் விவரித்துவிட்டு, சில விஷுவல் காட்சிகளையும் திரையிட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்த பிறகு நிறைய பாடல் வரிகள் எனக்குத் தோன்றியது. உண்மையில் பாடலின் ட்யூனுக்குள் வார்த்தைகளை அடக்குவது என்பது கடினமான பணி என்றாலும், இமானின் அழகான ட்யூனுக்கு, ஆழமான  பாடல் வரிகள் கன கச்சிதமாகப் பொருந்தி சிறப்பாக அமைந்துவிட்டது.


பாடல் வரிகளைக் கேட்டதுமே இசையமப்பாளர் இமானும், இயக்குநர் ரத்தின சிவாவும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள். இவை அனைத்துக்கும் மேலாக பாடகர் திருமூர்த்தி அனுபவித்து, ரசித்து பாராட்டுக்குரிய விதத்தில் இந்தப் பாடலைப் பாடியிருப்பதுதான் பாடலின் சிறப்பம்சமே. பாடல் பதிவு முடிந்ததும், திருமூர்த்தி தனக்குப் பிடித்த வரிகள் என்று சிலவற்றைச் சொல்லி பாடிக் காட்டியபோது நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்து இமையமைப்பாளர் இமானுடன் இசைப் பயணத்தைத் தொடர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுக்காக டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்க, ரத்தின சிவா இயக்கும் சீறு படத்தில் ஜீவா, ரியா சுமன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர். நவ்தீப் எதிர்மறை வேடத்தில் நடிக்க, காயத்ரி கிருஷ்ணா மற்றும் சதீஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எதிர்வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகெங்கும் திரைக்கும் வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைக்க, பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

Tags: Dr Isari GaneshJiivaRathina SivaSeeruTamil MovieVels Film International
Previous Post

Avane Srimannarayana Movie Stills

Next Post

‘கடலில் கட்டுமரமாய்’ – முழுக்க முழுக்க விவசாயிகளுக்கான திரைப்படம்

Next Post
‘கடலில் கட்டுமரமாய்’ – முழுக்க முழுக்க விவசாயிகளுக்கான திரைப்படம்

'கடலில் கட்டுமரமாய்' - முழுக்க முழுக்க விவசாயிகளுக்கான திரைப்படம்

Popular News

  • பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

    0 shares
    Share 0 Tweet 0
  • மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!

May 30, 2026

“எல்லோரையும் நம்பாதே” என்பது ரவி மோகன் தனது இளம் பருவ ரவி மோகனுக்கு அளிக்கும் அறிவுரை.

May 30, 2026

பிரபல கேமராமேனும் தயாரிப்பாளருமான ரவியாதவ் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு.

May 30, 2026

பேட்மிண்டன் விளையாட்டு பின்னணியிலான தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படம்

May 30, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகிறது!

May 30, 2026

கரண் தயாநிதி மாறன் அறிமுகப்படுத்தும் கதைஷார்ட்ஸ் (KadhaiShorts) – மைக்ரோ டிராமாவுக்கென உருவாகும் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் கதைத் தளம்

May 30, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.