• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து!

by Tamil2daynews
July 4, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து!

 

ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் ‘லத்தி’.இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் இரவு பகலாக நடந்து வருகிறது.

ஏற்கனவே, இப் படத்தில் இடம் பெறும் இறுதிகட்ட 20- நிமிட காட்சிக்காக ஹைதராபாத்தில் 30- நாட்கள்,ஸ்டண்ட் காட்சி பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் அமைப்பில் , புது இயக்குநர் வினோத்குமார் டைரக்‌ஷனில்  பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. பாழடைந்த பில்டிங்கில் படமாக்கப்பட்டபோது நடிகர் விஷாலுக்கு கையில் விபத்து ஏற்பட்டு, சில நாட்கள் படபிடிப்பு ரத்தானது. பிறகு கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து முடித்தார்.

படத்தில் மீண்டும் ஒரு ஸ்டண்ட் காட்சி சென்னையில் இப்பொழுது இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்ற நிலையில், இரவு பகலாக ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருகிறார். கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்லும் போலீஸ் கான்ஸ்டபிள் விஷால் திடீரென அதிர்ச்சியாகிறார். 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை நிறுத்தி தாக்க ஆரம்பிக்க, தைரியமாக கீழே இறங்கி அவர்களை அடித்து தாக்கி கொண்டு கைதியை பிடித்து செல்கிறார். இந்த காட்சியில், ஒரே நபரை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்க, எதிர்பாராத விதமாக காலில் நிஜமாகவே அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்தார் விஷால்.

எழும்பி நின்று நிற்க முடியாமல், கீழேயே இருந்து விடுகிறார். உடனே அவருக்கு ‘பர்ஸ்ட் எயிட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனே மாலை நேர படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அவரை மருத்துவரிடம் கூட்டி சென்று சிகிச்சை அளித்தார்கள்.  அல்ல வேளை எலும்பு முறிவு எதுவும் இல்லை. பிசியோ செய்தால் மேலும் என்று டாக்டர் சொல்ல, தீவிரமாக பிசியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாளை மீண்டும் பரிசோதிக்கப்படு வலி இல்லையென்றால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் விஷால்.
Previous Post

SonyLIV தமிழில் அட்டகாசமான பல புதிய அசல் படைப்புகளை வழங்கவுள்ளது

Next Post

SonyLIV’ தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” டீசர் வெளியானது !

Next Post

SonyLIV' தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பு, “தமிழ் ராக்கர்ஸ்” டீசர் வெளியானது !

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.