வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) – விமர்சனம்
குகன் சக்ரவர்த்தியார் இயக்கி, தயாரித்து, நடித்து, பல தொழில்நுட்பப் பொறுப்புகளையும் (கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, சண்டை) ஏற்று, மாதா பிதா ஃபிலிம் பேக்டரி சார்பில் வெளியான ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்படம், ஒரு தனிமனிதனின் கடும் உழைப்பில் உருவான முயற்சியாகக் கருதப்படுகிறது.
இப்படம் அப்துல் கலாமின் கனவை மையமாக கொண்டு, நாயகன் குகன் சக்ரவர்த்தியார் கதாநாயகனாக நடிக்க, அலைனா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கனவு, உழைப்பு மற்றும் குறுநில மன்னன் என்ற பாணியில் ஒரு ஆக்ஷன் பாணி கதையை இப்படம் கொண்டுள்ளது.
படத்தின் ஹீரோ குகன் சக்கரவர்த்தியார் .நடிப்பு மட்டுமில்லாமல் இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் என 21 பொறுப்புக்களை ஏற்று இப்படத்தில் பணியாற்றி ஒரு கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்திருக்கிறார். 21 பொறுப்புகள் ஏற்றிருந்தாலும் ஏனோ தானோ என்று படத்தை எடுக்காமல் ஒரு கதை, அதில் காதல், ஆக்சன், அரசியல் செண்டிமெண்ட், ஹாரர், மெசேஜ் என எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி இயக்கி இருப்பது ஆச்சரியத்தை தருகிறது
ஒரு காதல் கதையாக சென்றுக் கொண்டிருந்த படம் திடீரென்று பேய் கதையாக மாறுவது பின்னர் அது அரசியல் கதையாக உருபெறுவது என காட்சிகள் விறுவிறுப்பாக செல்கின்றன.திராவிட அரசியலை மையப்படுத்தும் வகையில் வங்காள விரிகுடா கடற்கரையில் துயில் கொண்டிருக்கும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி , புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்றவர்களின் சமாதிகளுக்கு புதிய வடிவம் கொடுத்து மெரினா கடற்கரை பெயரை மாற்றி திராவிட கடற்கரை என பெயர் சூட்ட வேண்டுமென்று அரசுக்கு இயக்குனர் கோரிக்கை விடுத்திருப்பது அரசு கவனத்தில் கொள்ளத்தக்கது.முழு படத்தையும் பார்த்த பிறகு அப்துல் கலாம் பற்றி இயக்குனர் சொன்ன விஷயங்களுக்காக அவரை பாராட்டியாக வேண்டும்.







