• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

டாக்ஸிக் – விமர்சனம்

by Tamil2daynews
August 28, 2026
in விமர்சனம்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டாக்ஸிக் – விமர்சனம்

 

இந்திய அளவில் டாப் ஸ்டாராக மாறியிருக்கும் யஷ் மற்றும் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த்,ஆகியோர் நடித்துள்ள  திரைப்படம் டாக்ஸிக்.

1947யில் இந்தியா விடுதலை பெற்றுவிட்டாலும், கோவாவில் போர்ச்சுகீசியர்களின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. சால்வடார் என்ற நபர் கேங்ஸ்டர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்க, அவருக்கு துணையாக ராயாவும் (யஷ்), அவரது அக்கா கங்காவும் (நயன்தாரா) உள்ளனர்.

தங்கள் பெற்றோரை கொன்றவனை பழிதீர்க்கும் ராயாவும், கங்காவும் போதைப்பொருள் கடத்தலில் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். மது, பெண்கள் என டாக்ஸிக் ஆக வாழும் ராயா, தனது பாஸ் சால்வடாரின் மகள் ரெபெக்கா (தாரா சுதாரியா) உடன் நெருக்கமாகிறார்.

இந்த விஷயம் சால்வடாருக்கும் தெரிய வந்ததும் ராயாவுக்கும், ரெபெக்காவுக்கும் திருமணம் முடிவாகிறது. அதே சமயம் கோவாவிற்கு சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்த வரும் நாடியா உடனும் ராயா நெருக்கம் கொள்கிறார்.

அதன் விளைவாக நாடியா கார்ப்பமாகிறார். இது சால்வடாருக்கு தெரிய வர ராயா, கங்கா உள்ளிட்ட அனைவரின் வாழ்க்கையும் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

மலையாள திரையுலகில் ஹீரோயினாக வலம் வந்து, பின் இயக்குநராக மாறி லையர்’ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ்.

அவரது இயக்கத்தில் யஷ் நடிக்கும் படம் என்பதும், நயன்தாரா மற்றும் கியாரா, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி என முன்னணி நடிகைகளும் இடமபெற்றுள்ளார்கள் என்பதுமே டாக்ஸிக் படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை தூண்டியது.

அதிலும் கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் இப்படத்தை இயக்கியுள்ள கீது மோகன்தாஸ், ஆக்ஷ்ன் மற்றும் எமோஷனல் டிராமாவாக இப்படத்தைக் கொடுத்துள்ளார். முதல் பாதியில் ராயா என்ற கதாபாத்திரம் எந்த அளவிற்கு டாக்ஸிக் ஆனது என்பதையும், என்னவெல்லாம் செய்யும் என்பதையும் இயக்குநர் நேர்த்தியாக காட்சிப்படுத்தியுள்ளார்.

காதலா? காமமா? என்று தெரியாமலேயே கியாராவுடன் பழகும் ராயா சம்பந்தப்பட்ட காட்சிகளை பல படங்களில் பார்த்திருப்போம். என்றாலும் அந்த கதாபாத்திரங்களும் பேசும் வசனங்கள் காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன. கேங்ஸ்டர் படங்கள் என்றாலே வன்முறை இருக்கும். இதில் அதையெல்லாம் தாண்டிவிட்டார்கள் என்றே கூறலாம்.

குறிப்பாக கே.ஜி.எப் படத்தையே மிஞ்சும் வகையிலான வன்முறைக்காட்சிகள் உள்ளன. அதற்கும் மேல் ஆபாசம் சார்ந்த காட்சிகள் கண்டிப்பாக முகம் சுளிக்க வைக்கின்றன. லாஜிக் மீறல்கள் என்பதும் இல்லாமல் இல்லை. முதல் பாதி சற்று சுவாரஸ்யமாகவே நகர இடைவேளை ‘என்ன இப்படியாகிவிட்டது’ என்றே கேட்கத் தோன்றும்.

அதன் பின்னரான இரண்டாம் பாதியில் பொறுமையை சோதிப்பது படத்தின் நீளம்தான். முக்கியமான ட்விஸ்ட் வரும் வரை என்னடா நடக்குது இங்க என்றே நம்மை கேட்க வைத்துவிடுகிறார் இயக்குநர். அதனாலேயே ட்விஸ்ட் வெளியானதும் அதனை ஏற்றுகொள்ளக் கொள்ள முடியவில்லை.

சண்டைக்காட்சிகளை சற்று குறைத்து, படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் சொல்ல வந்த விஷயம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு திருப்தி அளித்திருக்கும். நடிகர்களைப் பொறுத்தவரை யஷ் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது ஸ்கிரீன் பிரசென்ஸ் மிரட்டல். நயன்தாராவும், கியாராவும் அசால்ட்டாக தங்களது கேரக்டரை செய்துள்ளனர்.

ருக்மிணிக்கு அவ்வளவு பெரிய ரோல் இல்லை. தாரா மற்றும் ஹுமா குரேஷியின் கதாபாத்திரம் கச்சிதம். டெக்னிக்கலாக படம் மிரட்டலாக பிரம்மாண்டமாக உள்ளது. 1947, 1960களின் காலகட்டத்தில் கோவாவில் இருப்பது போன்ற உணர்வை தந்துள்ளனர் படக்குழுவினர். ரவி பஸ்ரூரின் பின்னணி இசையும், வசனங்களுக்கும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.

மொத்தத்தில் இந்த டாக்ஸிக் படம் பார்வையாளர்களை எரிச்சல் ஊட்டும்.

படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்களிடம் கதை என்ன என்று கேட்டால் மண்டையை சொரிந்துகொண்டே ஓடுவது நிச்சயம்.

டாக்சி மொத்தமும் சொதப்பல்.
Previous Post

அக்ஷய் குமார் – சைஃப் அலிகான் அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ‘ஹைவான்’ டிரெய்லர் வெளியானது..!!

Next Post

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

Next Post

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

Popular News

  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.