• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் கலக்கும் ஷாம்..!

by admin
January 2, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’யில் கலக்கும் ஷாம்..!
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவின் வேகம் மிகுந்த ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து  படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் ஷாம்.

சமீப காலமாக கதைத் தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ஷாம், படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு, நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என செலக்டிவாக நடித்து வருகிறார்..

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான ‘புறம்போக்கு’ படமாகட்டும்; மற்றும் ரசிகர்களின் மனதிற்கு மிக நெருக்கமாக ஷாமை கொண்டுபோய் சேர்த்த ‘6 மெழுகுவர்த்திகள்’ படமாகட்டும், என்றைக்கும் அவரது நடிப்பை நினைவுகூரும் விதமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

அந்தவகையில் தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ படத்தில் கலக்கலான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் ஷாம்..

இந்த படத்தில் நடித்திருப்பது குறித்து ஷாம் கூறும்போது,

“அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர்.

அவரிடமிருந்து திடீரென ஒருநாள் அழைப்பு வந்தது.. அவர் தயாரித்து வரும் ‘பார்ட்டி’ படத்தில் நடிக்குமாறு என்னிடம் கேட்டார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இளைஞர்களை ஈர்க்கும் படம் பண்ணக்கூடியவர்.அவரது படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை..

ப்ளஸ் சிவா அண்ணன் படம்.. டபுள் தமாக்கா! உடனே ஓகே சொல்லி ஃபிஜிக்கு போனேன்.

அதற்கேற்ற மாதிரி அந்த கதாபாத்திரமும் என் மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருந்தது. மேலும் வெங்கட்பிரபு டைரக்ஷனில் நடிப்பதும் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. செம ஜாலியான… நட்புக்கு மரியாதை கொடுக்குற அற்புதமான டீம்! கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும்னு நம்புறேன்.

இன்னொரு பக்கம் கதாநாயகனாக நடித்துவரும் ‘காவியன்’ படம், முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இது தவிர நல்ல படங்களையும் எனது தயாரிப்பில் உருவாக்கும் பொருட்டு, இரண்டு கதைகளைத் தேர்வு செய்துள்ளேன்.

மேலும் வெளி  தயாரிப்பில் அருமையான கதை ஒன்றைக் கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.

அப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது.

எத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, எவ்வளவு காலம் ரசிகர்களின் மனதில் நிற்கும் விதமான படங்களில் நடித்தோம் என்பதில் தான் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். அந்தவிதமாக வரும் 2019ல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில்  பார்க்கலாம்..

தொடர்ந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக, இணையதள நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்றார் ஷாம்

.

Tags: partyShaamபார்ட்டிஷ்யாம்
Previous Post

2018-ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள் மற்றும் டாப் 10 மொக்கை படங்கள் இதோ!

Next Post

“ஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல் ஹிட்களை அள்ளுகிறது :நெகிழும் ‘பண்ணாடி ‘படக்குழு !

Next Post
“ஒன் உசிரு காத்துல’ எஸ்.ஜானகி பாடிய பாடல் ஹிட்களை அள்ளுகிறது :நெகிழும் ‘பண்ணாடி ‘படக்குழு !

"ஒன் உசிரு காத்துல' எஸ்.ஜானகி பாடிய பாடல் ஹிட்களை அள்ளுகிறது :நெகிழும் 'பண்ணாடி 'படக்குழு !

Popular News

  • மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ரோமியோ’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.