• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்… ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!

by Tamil2daynews
April 23, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“காந்தி கிருஷ்ணாவின் படங்கள் நாவலை படிப்பது போன்ற அனுபவத்தை பெரிய திரையில் தரும்… ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் அதுபோன்ற ஒரு பயணம்” – ஜி.வி. பிரகாஷ் குமார்!

 

பன்முகத் திறமையும் தொடர் வெற்றிகளும்தான் திரைத்துறையில் ஒருவர் நீடித்து நிலைக்க முக்கிய காரணம். அந்த வகையில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். பல மொழிகளிலும் பல்வேறு வகை படங்களிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுடன் மீண்டும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் இணைந்திருக்கிறார். இதற்கு முன்பு இவர்கள் இணைந்து பணிபுரிந்த ‘ஆனந்த தாண்டவம்’ படத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இணைந்திருக்கும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்து கொண்டதாவது, “காந்தி கிருஷ்ணா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரிந்தது ஸ்பெஷலான அனுபவம். ’ஆனந்த தாண்டவம்’ என் வாழ்க்கையில் முக்கியமான கட்டத்தில் வந்த படம். அந்தப் படத்தில் என்னை நம்பி, ரசிகர்களை சென்றடைந்த இசையை உருவாக்க வாய்ப்பு கொடுத்த காந்தி கிருஷ்ணா சாருக்கு நன்றி. இசையமைப்பாளராக ஒரு வலுவான அடித்தளத்தை எனக்கு அமைத்து கொடுத்த படங்களில் அது முக்கியமானது. மனித உறவுகளை அவர் படங்களில் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆழமும், நுணுக்கமும், நேர்மையும் கலந்த அந்த அணுகுமுறையால் அவரது படங்களை ஒரு நாவலை திரையில் காண்பது போல உணர வைக்கும்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லாத ஒரு கதையை பல உணர்வுகளுடன் தன்னுள்ளே மறைத்து வைத்திருக்கும். ‘பிரேக்ஃபாஸ்ட்’ அப்படியான ஒரு படம். இன்றைய காலத்தில் உறவுகளின் சிக்கல்களையும், மனிதர்களின் உணர்வுகளை பற்றியும் இந்தப் படம் திரையில் பேசும். இந்தப் படத்திற்கு இசை அமைக்கும் போது, கதை ஓட்டத்துடன் இயல்பாக கலந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது காட்சிகளை மீறி ஒலிக்காமல், கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணித்து, அவர்களின் உணர்வுகளை உயர்த்த வேண்டும் என்பதே என் நோக்கம். இந்தப் படத்தின் பாடல்கள் திரையைத் தாண்டியும் ரசிகர்களிடம் நீண்டநாள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். படத்தை பெரிய திரையில் ரசிகர்களுடன் காண ஆவலாக உள்ளேன்” என்றார்.

நடிகர்கள்: ராணவ், ரோஸ்மின், சம்பத் ராஜ், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாத் மற்றும் பலர்.

தொழில்நுட்பக்குழு விவரம்:

தயாரிப்பாளர்: கிரிஜா வரதராஜ்,
இயக்குநர்: காந்தி கிருஷ்ணா,
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்,
பாடல் வரிகள்: வைரமுத்து மற்றும் விவேக்,

தமிழ்நாடு திரையரங்க விநியோகஸ்தர்: குகன்

உலகம் முழுவதும் ஏப்ரல் 24 அன்று ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
Previous Post

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்

Next Post

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures ) தயாரிப்பில் பெரிய அப்டேட் – கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய குடும்ப திரைப்படம்!

Next Post

பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures ) தயாரிப்பில் பெரிய அப்டேட் – கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய குடும்ப திரைப்படம்!

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.