நடிகர் சரண்ராஜ் மகன் அறிமுகமாகும் படத்தின் பெயர் “குப்பன்”..!
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, பெங்காலி உட்பட பல 9 மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ்.
நாயகன், குணசித்திரம், வில்லன் என எந்த கதா பாத்திரத்திலும் தனி முத்திரை பதித்து, மக்களின் மனதில் தனித்த இடம் பிடித்தவர். ஒரு சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் இப்படம் மூலம் இயக்குநராக கால் பதிக்கிறார்.
இந்த புதிய திரைப்படத்திற்கு “குப்பன்” என பெயர் வைத்துள்ளார்.கதை, திரைக்கதை, வசனம் அவரே எழுதுகிறார்.
35 வருஷமா பாலவாக்கத்தில இருக்கேன். தினமும் நாயை கூட்டிட்டு கடற்கரை வழியா வாக்கிங் போவதுண்டு. அப்போ பல பேர் பழக்க மாகி அங்கு அரட்டை அடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்படிதான் குப்பன் என்ற ஃபிஷர்மேன் பழக்கமாச்சி. அப்போ தான் தோணிச்சு.. ஒரு ஃபிஷர்மேன் கதையை நாம ஏன் எழுத கூடாதுன்னு. கதை எழுதி முடிச்சதும் நண்பர் பெயரையே தலைப்பாக வெச்சுட்டேன். அதுதான் “குப்பன்”. அவரும் இதில் சின்ன கேரக்டரில் நடித்துள்ளார்.

பைலட்டாக இருந்து, நடிப்பு கல்லூரியில் சிறப்பு பயிற்சி எடுத்து கொண்ட சரண்ராஜின் இரண்டாவது மகன் தேவ் சரண்ராஜ் நாயகனாக அறிமுகமாகிறார். இன்னொரு நாயகனாக ஆதி தேவ் அறிமுகமாகிறார். இவர்களுடன் சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாசலம் நாயகிகளாக அறிமுகமாகுகிறார்கள்.
மேலும் சரண்ராஜும் நீண்ட நாள்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகன் தேவ் சரண்ராஜின் மாமனாக சரண்ராஜ் நடித்து வருகிறார்.ஒரு குப்பத்து மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை தான் இந்தப்படம்.
ஒளிப்பதிவு : ஜனார்தன்,
இணை இயக்கம், பாடல்கள் : K.சுரேஷ் குமார்
இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கத்தில் ஆரம்பமாகி விசாகப்பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும்.