ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Talk Of The Town திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

by Tamil2daynews
May 17, 2022
in சினிமா செய்திகள்
0
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!
0
SHARES
325
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Talk Of The Town திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

 

தமிழ் சினிமா பல்வேறு கலை திறமைகளை கண்டெடுத்த  கனவுகளை துரத்தும் சராசரி மனிதனாய் நுழைந்து இன்று டாக் ஆஃப் தி டவுனில் இருக்கும் ஃபிலிம் பெர்ஸ்னாலிட்டி K.சதீஷ்  .. இந்த ஆக்டிvaana பர்சனாலிட்டி குறித்து இப்ப நம்ம கவனத்துக்கு வந்த ரிப்போர்ட் இது:

அட.. இந்த  சதீஷ்-ஸா? அப்படி என்ன பண்ணிட்டாரு இவர்? 
உலகமே கொண்டாடுற ஒரு படத்தோட பிள்ளையார் சுழியே இந்த K.சதீஷ் (சினிமாவாலா) என்று சொன்னால் நம்புவீர்களா ? சரியா சொல்லணும்னா ஒரு பத்து வருஷ பிளாஷ்பேக்.
2011-ம் ஆண்டு கோகுல் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரேயா ஆகியோர் நடித்து வெளியான படம் “ரௌத்திரம்”.
இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சத்யனுடன் காஃபி ஷாப்பில் தகராறு பண்ணுற ஒரு கேரக்டரில் நடித்திருப்பார் K.சதீஷ்
அவரிடம் மினி நேர்காணல் இதோ -சினிமா காதலன் ஆனது எப்போது ? திரை பயணம் பற்றி ஒரு சின்ன பிளாஷ்பேக் போயிட்டு வரலாமா ? 
சென்னை லயோலா கல்லூரியில் படிச்சேன். எல்லாரும் சொல்றா மாதிரி  “கல்லூரி வாழ்க்கை தனி உலகம்”.  நண்பர்களோட வாழ்க்கைய என்ஜாய் பண்ணிட்டு, படிக்க வேண்டிய நேரத்தில படிச்சிட்டேன். அப்படியே லண்டனில் MBA பண்ணேன். வெளிநாட்டில் இருந்து ஸ்டைலா ஊருக்கு வந்த எனக்கு வாழ்க்கை நிறையை கத்து தந்துச்சு.

முதல் காதல் பற்றி சொல்றா மாதிரி…முதல் வேலை அணுபவம் பற்றி
?

லியோ விஷன் சவுண்ட் எஃபெக்ட்ஸ் ஸ்டூடியோல வேலைக்கு சேர்ந்தேன். அங்க வர படங்களை பார்த்து என் ஹார்ட்ல “சினிமா” சவுண்ட் சிம்போனி வாசிக்க ஆரம்பிச்சது அங்க தான். தரமான படங்களை ரசிகர்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும் என்கிற ஆர்வத்துல நானும் லியோ விஷன் VS ராஜ்குமாரும் சேர்ந்து தயாரிக்கனும்னு முடிவு செஞ்சோம். அப்படி தயாரிச்ச முதல் படம் தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

நீங்க நடிச்ச படங்கள் என்னென்ன ? டக்குனு சொல்லுங்க கேப்போம்

ரௌத்திரம், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, காஷ்மோரா, ஜூங்கா, கொரில்லா, கொலைகாரன், தி சேஸ்,சீறு,சமீபத்தில் “தளபதி”விஜய் ன்  மாஸ்டர்.

உங்கள நடிகர்னு நெனச்சோம்.. தயாரிப்பாளர்னும் சொல்றாங்க ! அத பற்றி சொல்லுங்க …
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை தயாரிச்சேன். அது தான் முதல் படம். ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணுற மாதிரி நல்ல படத்தை தயாரிச்சாச்சு. அதே ரசனையில்  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தயாரித்தோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் ரிலீஸ் ஆகி பட்டி தொட்டியெங்கும் சுமார் மூஞ்சி குமார் தான் டாக்கே. யூத் பசங்களுக்கு  பிடிச்சா மாதிரி படம் பண்ண தெம்போட கிட்ஸ் விரும்புறா மாதிரி “சங்கு சக்கரம்” படம் தயாரித்தோம். அதுக்கு அப்புறமா கொரோனாவாலா உலகமே மாறிடுச்சு, சூழ்நிலைக்கு ஏற்ற  மாதிரி ரசிகர்களை என்டர்டெயின் செய்யணும்னு இப்போ “கொரோனா குமார்” படத்தை தயாரிச்சிட்டு இருக்கோம். சுமார் மூஞ்சி குமார நமக்கு அறிமுகப்படுத்தின கோகுல் தான் இந்த படத்தையும் டைரக்ட் பன்றாரு.
நடிப்பு, தயாரிப்பு வேற ஏதாச்சு வித்தை ஸ்டாக் வச்சுருக்கீங்களா ? 

ப்ராஜெக்ட் டிசைனரா இருந்திருக்கேன். ஒரு ப்ராஜெக்ட் டிசைனரோட ரோல் என்னனா.. ப்ரீ-புரொடக்ஷன்ஸ்  முன்னாடி ஸ்டேஜ். டைரக்டர்ஸ் அவங்க கதைய தயாரிப்பாளர்கள் கிட்ட சொல்லுவாங்க. அப்போ கதைக்கு தேவையான ஹீரோ, ஹீரோயின் மத்த ஆர்ட்டிஸ்ட்னு எல்லாரையும் ஃபார்ம் பண்ற முக்கியமான பொறுப்பு. யாமிருக்க பயமேன், மாயா, தி சேஸ், சூர்ப்பனகை, மாஸ்டரில் ஒரு சிறிய பங்கு வரை நம்ம டிசைன் பண்ணது தான்.

இது தவிர ஸ்டுடியோ க்ரீன் & திருப்பதி பிரதர்ஸ்க்கு மார்க்கெட்டிங் ஹெட்டாவும் இருக்கேன். சிங்கம்-2, பிரியாணி, சூதுகவ்வும், குற்றம் கடிதல், கோலி சோடா, சதுரங்க வேட்டை, மஞ்சப்பை, அஞ்சான், உத்தமவில்லன் படத்தொட ப்ரோமோஷன்ஸ்லாம் பண்ணிருக்கேன்.

திரை ரசிகர்களுக்கும் புரியுறா மாதிரி, நீங்க பண்ணுற ஒர்க் பற்றி சொல்லுங்க …
ஆர்ட்டிஸ்ட் மேனேஜ்மெண்ட் ஒரு கம்பெனிய மும்பை, ஹைதராபாத், சென்னைல நடத்திட்டு இருக்கேன். இதோட அல்டிமேட் கோல் என்னன்றதும் நான் சொல்லிடறேன். ஒரு புது டைரக்டர் ப்ரொடியூசர் கிட்ட கதை சொல்லணும்னு போறப்போ.. தம்பி முதல்ல ஹீரோ/ ஹீரோயின் டேட் வாங்கிட்டு வாங்கனு சொல்லிடுவாங்க. அதையே ஆர்ட்டிஸ்ட் கிட்ட கதை சொல்லுறப்போ, முதல்ல ப்ரொடியூசர் கிட்ட கதைய சொல்லுங்கனு சொல்வாங்க. அந்த புது டைரக்டருக்கு எந்த ரூட்டும் இருக்காது. அதுக்கு தான் இந்த வழி. என்கிட்ட கதை சொன்ன போதும், எனக்கு தெரிஞ்ச ஆர்ட்டிஸ்ட்ட வச்சு நான் அப்ரோச் பண்ணுவேன்.
சினிமா தான் HomeGround-னு இருக்கீங்க… உங்க Family Background பற்றி சொல்லுங்க ..
அப்பா P.J.குமார் போஸ்ட் மாஸ்டர் (மயிலாப்பூர் பிராஞ்ச்) , அம்மா K.ரஜினி ஹோம்மேக்கர். நான் எனர்ஜியா ஓடிட்டு இருக்க காரணமே எங்க அம்மா தான். இவங்களுக்கு அப்புறம் என்னோட பிரண்ட்ஸ்  ஒவ்வொரு வாட்டியும் துவண்டு நிற்க்கும்  போது எனர்ஜி குடுத்தது என்னோட நண்பர்கள். ஸ்கூல் மற்றும் திரைத்துறை நண்பர்கள்.
எந்த ஒரு பின்பலமும் இல்லாம சினிமாவுல ஒருத்தர் வளர்வது பெரிய விஷயம்.அதுக்கு பின்னாடி இருக்க கஷ்டங்கள் பற்றிஉங்க கருத்து ? அதாவது உங்க நோக்கம்  என்னனும் சொல்லுங்க

பயோபிக் மூவிஸ்ல மட்டும் தான் இந்த மாதிரி விஷயம்லாம் பார்த்திருக்கோம். இப்போ சொல்லிக்கலாம் எனக்கு 16 வருஷ எக்ஸ்பீரியன்ஸ்னு. என்னோட பிகினிங் ஸ்டேஜ்ல உதவ யாரும் இல்ல. நானே ஓடி ஓடி தான் எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். நான் ஒன்னும் சாதனைலாம் எதுவும் பண்ணல. நாலு பேருக்கு உதவி பண்ணுற நிலைமைல கடவுள் என்ன வச்சிருக்காரு. நான் தான் 16 வருஷம் கஷ்டப்பட்டேன். எனக்கு அப்புறம் வர இளைஞர்கள் எல்லோரும்  சரியான பாதையில  சரியாக முறையில்  பண்ணனும். அதுக்கான ஃபார்முலாவை நான் நிச்சயம் சொல்லி தருவேன்.

என்னோட நோக்கமும் இதுதான். எல்லாமே இங்க Hardwork & Smartwork தான். ஒரு கைடன்ஸா இருக்கனும், ஒரு லிஃப்ட்டா இருக்கனும் அவ்வளவுதான்.முயற்சி செய்கிற இளைஞர்களுக்கு நான் நிச்சயம் ஒரு ஏணியாக இருப்பேன்.அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் இந்த  K. சதீஷ் (சினிமாவாலா).

இவர் தயாரிப்பில் கொரோனா குமார் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படமும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் என்று கூறினால் அது மிகையாகாது. நம்மில் பலருக்கும் சினிமாத் துறை என்பது கனவு தொழிற்சாலையாகவே இருந்து வருகிறது.

இன்றைக்கு அந்தந்த சொந்த ஊரில் இருந்து இன்று வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்யணும் வர இளைஞர்கள் மத்தியில் சினிமாவுக்குப் போய் சாதிச்சு முன்னேற வேண்டும் என்ற இளைஞர்களே அதிகம்

அப்படி இருக்கும் இளைஞர்களே நீங்கள் வந்து  இந்த சதீசை வந்து பாருங்கள் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு உதவியாக இருப்பார்.
மேலும் இந்த “சினிமாவாலா” சதீஷ் உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜீன்-3ல் வெளியாகும் உலகநாயகனின் “விக்ரம்” படத்தில் நடித்திருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு.
         தகவல் – சரண்
Previous Post

நான் உடை மாற்றும் பொழுது என்னை மானபங்கம் செய்தனர். பிரபல பெண் தயாரிப்பாளர் பகீர் புகார்..!

Next Post

சுந்தர்சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான வேட்டைகள் ஆரம்பம் பாடல் !!

Next Post
Talk Of The Town  திரை பிரபலம் Sathish (Cinema Wala)..!

சுந்தர்சி ,ஜெய் ஜெய் நடித்துள்ள பட்டாம்பூச்சி படத்தில் இருந்து வெளியான வேட்டைகள் ஆரம்பம் பாடல் !!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

    0 shares
    Share 0 Tweet 0
  • படவாய்ப்பு தருகிறேன் என கூறி என்னை நாசம் செய்த இயக்குனர்கள்! அதையும் சலிக்காமல் செய்தேன்.. டிக்டாக் இலக்கியா பகீர் தகவல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

    0 shares
    Share 0 Tweet 0
  • 15 வருடங்களுக்குப் பிறகு ஊர்வசி – கலாரஞ்சனி சகோதரிகள் இணைந்து நடித்துள்ள ‘யோசி’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

March 23, 2023

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

March 23, 2023

39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து – சித்ரா !

March 23, 2023

தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

March 23, 2023

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

March 23, 2023

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!