• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ருத்ர தாண்டவம்” மோகன் . ஜி  அவர்களுக்கு தங்கர்பச்சான் வாழ்த்துக்கள்…

by Tamil2daynews
September 29, 2021
in சினிமா செய்திகள்
0
“ருத்ர தாண்டவம்” மோகன் . ஜி  அவர்களுக்கு தங்கர்பச்சான் வாழ்த்துக்கள்…
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
என்னை ஒரு திரைக்கலைஞனாக எண்ணி இதை எழுதவில்லை; தங்களின் “ருத்ர தாண்டவம்” திரைப்படத்தை கண்டுணர்ந்த மக்களில் ஒருவனாகவே இதை தெரிவிக்கிறேன். ஒரு படைப்பாளனாக இச்சமூகத்திற்கு உங்களின் கடமையை செய்தது போல் இத்திரைப்படத்தை ஒவ்வொரு மனிதனும் காண வேண்டியதும் ஒரு கடமை என உணர்கிறேன்.
உங்களின் முந்தைய திரைப்படம் “திரௌபதி” பெரும் வணிக வெற்றியை அடைத்திருந்தாலும் எனக்கு அது பிடித்தமானதாக இல்லை. அத்துடன் ருத்ர தாண்டவம் பார்த்து பாராட்டுபர்களின் பட்டியலையும் அவர்களின் பாராட்டுகளையும் காண நேர்ந்த பொழுது நான் இந்தப் படத்தை பார்த்துதான் ஆக வேண்டுமா எனவும் நினைத்தேன். படம் பார்த்து முடிந்ததும் அவ்வாறு எண்ணியதற்காக இப்பொழுது மனம்  வருந்துகிறேன்.
மக்கள் நாள்தோறும் சந்திக்கின்ற காண நேர்கின்ற இன்றைய சிக்கல்களைத்தான் காட்சிகளாக கருத்துகளாக முன் வைக்கின்றீர்கள் என்பதால் இப்படத்தை பார்த்தவர்களால் மற்றவர்களுடன் இதைப்பற்றி பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. எப்படியாவது இத்திரைப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதிகமாகவே நீங்கள் பேசுவதை காண்கிறேன். இனி அது தேவையில்லை. இனி உங்களின் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும்.
மக்களின் பலவீனத்தை பணமாக்குவதற்காக பொழுதுப்போக்கு எனும் போதைப்பொருளை  திரைப்படங்களாக  உருவாக்கி சமூகத்தை பின்னோக்கி சீரழிப்பவர்களுக்கிடையில் விழிப்புணர்வைத் தூண்டும் உங்களின் ருத்ர தாண்டவத்தை மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ஒரு திரைப்படத்தின் வெற்றி முதலீடு செய்த தொகையை  பல மடங்காக திருப்பி எடுப்பது மட்டுமல்ல. சமூகத்தை நல்வழிப் படுத்துவதற்கான விழிப்புணர்வுகளை விதைப்பதும் ஆகும். இத்திரைப்படம் குறித்த குறைகள் எனக்குத்தேவையில்லை. இவ்வணிகச்சூழலில் கிடைத்த நடிகர்களைக்கொண்டு கிடைத்த வசதி வாய்ப்புகளைக்கொண்டு எவரும் பேசத்துணியாதவைகளை திரை ஊடகத்தின் மூலமாக பல கோடி மக்களின் இதயங்களுக்கு கடத்தியிருக்கும் உங்களுக்கும் திரைப்படக்குழுவினருக்கும் இம்மக்களில் ஒருவனாக எனது நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன்.
Previous Post

கோவாவில் Big Daddy கப்பலில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்திய மாபெரும் அழகிப்போட்டி

Next Post

*RadheShyam to stick to festive release date of 14th Jan, 2021*

Next Post
*RadheShyam to stick to festive release date of 14th Jan, 2021*

*RadheShyam to stick to festive release date of 14th Jan, 2021*

Popular News

  • நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    நானும் விவசாயம் செய்வேன் – நடிகர் கார்த்தி

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; – இயக்குனர் ஸ்ரீகார்த்திக்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னைப் புத்தகக் காட்சி அரங்கில் வெளியிடப்பட்ட வசனகர்த்தா பிருந்தா சாரதியின் ‘இருளும் ஒளியும்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.