• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மூன்றாவது முறையாக இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” பட புகழ், RDM, சுரேஷ் ரவி கூட்டணி  !

by Tamil2daynews
March 20, 2021
in சினிமா செய்திகள்
0
மூன்றாவது முறையாக இணையும் “காவல்துறை உங்கள் நண்பன்” பட புகழ், RDM, சுரேஷ் ரவி கூட்டணி  !
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நீண்ட பொதுமுடக்க காலத்தின் பாதிப்புகள்,  உலகம் முழுக்க அனைத்து துறைகளிலும் எதிரொலித்தாலும், திரைத்துறையை தான்  அதிகம் பாதித்தது. ஆனாலும் நல்ல சினிமாக்களை மக்கள் என்றும் கைவிடுவதில்லை.  இந்த பொதுமுடக்க காலம் முடிந்து  தமிழ்திரையில் வெளியான “காவல்துறை உங்கள் நண்பன்” அதன் தரமான கருத்தியல்களுக்காக, மிக அற்புதமான உருவாக்கத்திற்காக அனைவராலும் பாராட்டு பெற்றது. மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று, சமீபத்தில் வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்ற சாதனையையும் படைத்தது. இந்த நிலையில் “காவல்துறை உங்கள் நண்பன்” பட  RDM, சுரேஷ் ரவி  கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்திற்காக  இணைந்துள்ளார்கள்.
இன்னும் தலைப்பிடப்படாத இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் Preniss International (OPC) Pvt Ltd சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரம் இயக்குநர் சேரனின் ‘திருமணம்’ படத்தையும் தற்போது வெளியாக காத்திருக்கும் ”நட்சத்திரா” படத்தையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இயக்குநர் RDM கூறியதாவது…
“காவல்துறை உங்கள் நண்பன்” படம் அனைத்து தரப்பில் இருந்தும் மிகச்சிறந்த பாராட்டுக்களை பெற்று தந்தது. பொதுமுடக்க துயர் காலத்திலும் மக்கள் ஆவலுடன் எங்கள் படத்தினை திரையரங்கிற்கு வந்து பார்த்தது மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்தது. இந்த பாராட்டுக்களும், ரசிகர்களின் வரவேற்பும் மேலும் தரமான திரைக்கதையினை உருவாக்க, பெரும் ஊக்கமாக அமைந்தது. “காவல்துறை உங்கள் நண்பன்” படம் காவல்துறையின் கருப்பு பக்கத்தை காட்டிய நிலையில் நாயகன் சுரேஷ் ரவி, தற்போது உருவாகவுள்ள படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழின் பிரபல நடிகர்கள் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். K.S. விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். விரைவில் படத்தின் இசையமைப்பாளரை இறுதி செய்யவிருகிறோம். சென்னை, பாண்டிச்சேரி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவக்கப்பட்ட நிலையில் இன்னும் சில  மாதங்களில் படப்பிடிப்பை துவங்கவுள்ளோம்.
Previous Post

நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது படத்திற்கு, இசையமைக்கிறார் சாம் CS !

Next Post

தணிக்கை குழுவின் பாராட்டை பெற்ற குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும்  தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம். 

Next Post
தணிக்கை குழுவின் பாராட்டை பெற்ற குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும்  தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம். 

தணிக்கை குழுவின் பாராட்டை பெற்ற குருபரன் இன்டர்நேஷனல்ஸின் வெளியிடும்  தி அட்வென்ச்சர்ஸ் ஆப் எ.ஆர்.ஐ திரைப்படம். 

Popular News

  • “உலகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக சிரிப்பும் காதலும் கலந்த திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளது”-நடிகர் பாரத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

    0 shares
    Share 0 Tweet 0
  • SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • 90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

    0 shares
    Share 0 Tweet 0
  • சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது…மேலும் இரண்டு புதிய போஸ்டர் விரைவில் வெளியாகும்!

July 7, 2026

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில்

July 7, 2026

சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஹெச். வினோத்தின் ஆஸ்பயர் உபுண்டு ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ராஜூ ஜெயமோகன் எழுதி, இயக்கி, நடிக்கும் திரைப்படம் ’அல்மோஸ்ட் நல்லவன்’!

July 7, 2026

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர் கோவையின் கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது!

July 7, 2026

கால்பந்து விளையாட்டின் பின்னணியில் உருவாகும் ‘7 ஸ்டார் பாய்ஸ்’

July 7, 2026

“இதயம் முரளி” பட முன் வெளியீட்டு விழா !!

July 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.