படத்தின் மையகதை:
மனிதர்கள் தன் தேவைக்குஏற்ற கனவு காணவேண்டும் என்பதே.பெரும்பாலும் மனிதர்கள் பொருளாதார ரீதியாக தன் தேவை அதிகமாக கனவு காண்பதே தவறு என்பதை மிகத்தெளிவாகா நடுத்தர குடும்பங்களுக்கு மட்டுமின்றி கோடிகளில் செலவிட்டு திருமணம் செய்யும் எல்லோருக்கும் இந்த சேரனின் திருமணம் படம் விழிப்புணர்வு என்றே தோன்றுகிறது.
சேரன் (அறிவுடைநம்பி)என்ற கதாபாத்திரத்தில் படம் பார்க்கும் அனைவருக்கும் மட்டுமில்லாமல் ஒரு நல்ல அண்ணணாகவும் எல்லோர்மனதிலும் இடம்பிடித்திருக்கிறார்.
சுகன்யா(மனோன்மணி)தனக்கு கொடுத்த தன் பங்கை மிகவும் அருமையாக பயன்படுத்திக்கொண்டார் என்பது மட்டுமின்றி ஜமீன் குடுபத்து பெண்ணாக நடித்து ஆடம்பர பெண்களின் மனதில் மட்டுமில்லாமல் படத்தின் இறுதியில் குடும்ப பெண்களின் மனதையும் கொள்ளை கொள்கிறார்.
படத்தில் மறக்கமுடியாத இரண்டு கேரக்டர் எம்.எஸ்.பாஸ்கர்,தம்பிராமையா மொத்த படத்தின் உயிர்நாடியே இந்த இருவரும்தான்.
கதாநாயகனும், கதாநாயகியும் படத்திற்கு தேவை என்றே தோன்றுகிறது.
ஏன் என்றால் கதைக்களம் அப்படி..!
காமெடியன் பாலசரவணன் படத்தில் வெறும் ஊறுகாய் மட்டுமே.
ஒரு திருமணத்தில் நம் முன்னோர்கள் ஆரம்பித்த சடங்கு, சம்பிரதாயங்களை இப்போ இருக்கிற தலை முறை மறந்து விட்டதை தெளிவாக நியாபகப்படுத்தியிருக்கும் இயக்குநர் சேரன் அவர்களுக்கு பல சபாஷ்.
சேரனின் திருமணம் எல்லோரும் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கலாம்.
பகை உள்ள குடும்பத்தினரும் இப்படம் பார்த்தால் பகை மறந்து ஒன்று சேர நிறைய வாய்ப்பு இருக்கின்றது இந்த சேரனின் திருமணத்தில்.
– உங்கள் சரண்