• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டைம் என்ன பாஸ் – தமிழ் சிட்காம் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது

by Tamil2daynews
September 15, 2020
in சினிமா செய்திகள்
0
டைம் என்ன பாஸ் – தமிழ் சிட்காம் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது
0
SHARES
97
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கவிதாலயா புரொடக்ஷன்ஸ் பேனரில் உருவாக்கப்பட்ட டைம் என்ன பாஸில் ரோபோ சங்கர், பாரத் நிவாஸ், பிரியா பவானிஷங்கர், அலெக்சாண்டர் பாபு, சஞ்சனா சரதி, மாமதி சாரி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம்  உறுப்பினர்கள்  செப்டம்பர்18-ஆம் தேதி பிரத்தியேகமாக  அமேசான் ப்ரைம் வீடியோவில் டைம் என்ன பாஸின் 10-பகுதிகளையும்  ஸ்ட்ரீம் செய்யலாம்
அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் ப்ரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல், பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேமிங் கண்டெண்ட் அனைத்தும் ஒரு மாதத்திற்கு ரூ.129 ரூபாயில் பெறலாம்.
மும்பை, இந்தியா, 15 செப்டம்பர் 2020 –  ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சிட்காம் டைம் என்ன பாஸின் டிரெய்லரை  அமேசான் பிரத்யேகமாக தனது ஸ்டீரிமிங் தளத்தில் வெளியிட்டது. கவிதாலயா புரொடக்க்ஷன்ஸ் பேனரில் உருவான, இந்த 10 பகுதியும் உங்களை சிரிப்பு கடலில் ஆழ்த்த வருகிறது.  வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த நான்கு பேருடன் தனது அறையை பகிர்ந்து கொள்ளும் ஐ.டி துறையில் பணியாற்றும் நபரைச் சுற்றி கதை நகர்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ரோபோ ஷங்கர், பாரத் நிவாஸ், பிரியா பவானிஷங்கர், அலெக்சாண்டர் பாபு, சஞ்சனா சரதி, மாமதி சாரி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் செப்டம்பர் 18 முதல் அதிரடி நகைச்சுவையை ஸ்ட்ரீம் செய்யலாம்.
டைம் என்ன பாஸின் கதைக்களம் புதிது மற்றும் டைம்-டிராவலை மையமாகக் கொண்டு நகைச்சுவை அமைந்துள்ளது. வாழ்க்கையின் இலகுவான பக்கத்தை  நிறைய மகிழ்ச்சி தரும் தருணங்கள் மற்றும் நகைச்சுவையுடன் எடுத்துக்காட்டுகிறது.
இந்த புதிய ப்ராஜெக்டை பற்றி கவிதாலயாவின் எம்.டி புஷ்ப கந்தசாமி கூறும்போது, “இந்த டைம் என்ன பாஸின் கதைக்கரு புதுமையானது, பார்வையாளர்களை சிரிக்க வைத்துக் கொண்டே, ஒரு புத்துணர்ச்சியூட்டும் காலத்தை கடந்து செல்லும் பயணத்திற்கு அழைத்து செல்லும். ஏ.ஆர்.ரஹ்மானுடனான ஹார்மோனிக்குப் பிறகு அமேசான் ப்ரைம் வீடியோவுக்காக மீண்டும் இணைந்திருப்பது  மிகவும் மகிழ்ச்சியை தருகிறது– டைம் என்ன பாஸ் தெற்கில் உள்ள பார்வையாளர்களையும் மகிழ்விக்கும் என்று நம்புகிறோம். இந்த கஷ்டமான காலக்கட்டத்தில் மக்களை மனதை கொஞ்சம் இலகுவாக்க திரைப்படத்துறையில் முன்னணியில் உள்ள கலைஞர்களை அழைத்து வந்துள்ளோம். இதை நாங்கள் ரசித்து உருவாக்கியது போலவே தமிழ் பார்வையாளர்களும் இதை அனுபவித்து பார்ப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.”
டைம் என்ன பாஸ் ப்ரைம் வீடியோ மற்றும் கவிதாலயா புரொடக்ஷன்ஸ் இடையேயான இரண்டாவது இணைவு. ஸ்டுடியோஸ் மெய்டன் டிஜிட்டலின்- ‘ஹார்மோனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’,  ப்ரைம் வீடியோவில் பிரத்தியேகமாக 2018 -ல் வெளியிடப்பட்டது. இந்தத் தொடர் பார்வையாளர்களை ரஹ்மானுடன் ஒன்றாக பயணிக்க வைத்தது, இதில் அவர் நான்கு கலைஞர்களுடன் சேர்ந்து இந்திய இசை பாரம்பரியத்தின் வேரை ஆராய்ந்தார்.
Watch the trailer here:
டிரெய்லரை இங்கே பாருங்கள்:
கதை சுருக்கம்:
டைம் என்னா பாஸ் என்பது, தற்செயலாக சென்னையில் வந்து மாட்டிக் கொள்ளும் வெவ்வேறு காலக்கட்டத்தை சேர்ந்த நான்கு பேருடன் தனது அப்பார்ட்மெண்டை பகிர்ந்து கொள்ளும் ஒரு சராசரி ஐ.டி. பையன்  அன்றாடம் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சாகசங்களைக் எடுத்துக்காட்டும் தமிழ் சிட்காம் காமெடி ஆகும்.
ப்ரைம் வீடியோவின் பட்டியலில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டின் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் டைம் என்ன பாஸும் சேருகிறது. அமேசான் ஒரிஜினல் தொடர்களான பந்திஷ் பண்டிட்ஸ், ப்ரீத்: இன் டு த ஷேடோஸ், பாட்டல் லோக், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ், தி ஃபேமிலி மேன், இன்சைட் எட்ஜ், மற்றும் மேட் இன் ஹெவன் மற்றும் விருது பெற்ற மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், பிளேபாக் மற்றும் தி மார்வெலஸ் மிஸஸ் மைசெல் போன்ற போன்றவற்றுடன் இந்திய படங்களான குலாபோ சிட்டாபோ, சகுந்தலா தேவி, பொன்மகள் வந்தாள், லா, பிரஞ்சு பிரியாணி, சுஃபியும் சுஜாதாவும் மற்றும் பென்குயின் ஆகியவையும் அடங்கும். அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் கூடுதலாக இதற்கு செலவழிக்க தேவையில்லை. இந்த சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளிலும் உள்ளன.
ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்பில் ப்ரைம் உறுப்பினர்கள் டை என்ன பாஸை எங்கும், எந்த நேரத்திலும் பார்க்க முடியும். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள் மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து  கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
ப்ரைம் வீடியோ இந்தியாவில் ப்ரைம் உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.999 அல்லது மாதத்திற்கு ரூ.129-க்கு கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-ல் மேலும் தெரிந்துகொண்டு 30 நாள் இலவச சேவைக்கு சப்ஸ்கிரைப் செய்யலாம்.
Previous Post

ட்ரெண்ட் லவுட் (Trend Loud ) நிறுவனத்தின் சார்பில்  உருவாகும் “அச்சம்,மடம், நாணம், பயிர்ப்பு”

Next Post

மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி!

Next Post
மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி!

மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி!

Popular News

  • துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட் (Jackie – No Retakes Allowed) ’!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • Thank you note from the desk of M/S. “ROWDY PICTURES”.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.