• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பாசத்தில் போட்டிபோடும் அண்ணன் தங்கை கதை…

by Tamil2daynews
October 9, 2021
in சினிமா செய்திகள்
0
பாசத்தில் போட்டிபோடும் அண்ணன் தங்கை கதை…
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பண்டிகை கால கொண்டாட்டத்தின் பகுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பச் சித்திரமான ஜோதிகா நடித்த உடன்பிறப்பே திரைப் படத்தின் ட்ரெய்லரை Amazon Prime Video அறிமுகப்படுத்தியது

 

இரண்டு உடன்பிறப்புகளுக்கு இடையேயான ஆழமான பிணைப்பை அழகாக வெளிப்படுத்தும் உடன்பிறப்பே திரைப்படம் ஜோதிகாவுக்கு 50 வது படம் ஆகும்

ஜோதிகா-சூர்யா தயாரிப்பில், இரா சரவணன் எழுதி இயக்கியுள்ள உடன்பிறப்பே திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் (ரக்த சம்பந்தம்) வரும் தசரா பண்டிகை நாளான 14 அக்டோபர் 2021 அன்று 240 நாடுகள் Amazon Prime Video-இல் பிரத்யேக உலகளாவிய பிரீமியராக ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது

சென்னை, அக்டோபர் 4, 2021-: ஜோதிகாவின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்கவுள்ள திரைப்படத்தின் உற்சாகத்தை மேலும் மெருகூட்டும் வகையில், Amazon Prime Video மற்றும் 2Dஎன்டர்டெயின்மென்ட் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குடும்பச் சித்திரமான உடன்பிறப்பே திரைப்படத்தின் டிரெய்லரை இன்று மிகுந்த ஆரவாரத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தியது. இந்த படம் உடன்பிறப்பின் அன்பு, குடும்பப் பிணைப்புகள் மற்றும் உறவுகளின் உணர்ச்சிபூர்வமான செறிவூட்டும் கதையைச் சித்தரிக்கிறது. இரா சரவணன் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில், ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி மற்றும் கலையரசன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் (ரக்த சம்பந்தம்) வரும் அக்டோபர் 14 அன்று 240 நாடுகள் Amazon Prime Video-இல் உலகளாவிய ரீதியில் வெளியிடப்படும்.

ஜோதிகா-சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் Prime Video சேவைக்கு இடையே சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மல்டி-ஃபிலிம் கூட்டணியில் இருந்து வெளிவரும் இரண்டாவது DTS படமாக உடன்பிறப்பே அமைகிறது.

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்டுள்ள இப்படத்தின் ட்ரைலரில், உடன்பிறந்த இருவரான வைரவன் (சசிகுமார்) மற்றும் மாதங்கி (ஜோதிகா) ஆகியோரின் கதையைச் சித்தரிக்கிறது. எப்படியாவது நீதி கோரப்பட வேண்டும் என்று வைரவன் நினைக்கும் போது, ​​மாதங்கியின் கணவர் சற்குணம் (சமுத்திரக்கனி) சட்டத்தின் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறார். பல ஆண்டுகளாக இவர்களிக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் தீவிரமடையும் போது, ​​குடும்பங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளால் இருவரும் இயக்கப்படுகிறார்கள் – .

ஆனால் அவர்கள் வெற்றி பெறுவார்களா? காதல், சிரிப்பு மற்றும் குணச்சித்திரம் போன்ற உணர்ச்சிகள் நிறைந்த உடன்பிறப்பே திரைப்படம் வரும் இந்த தசராவில் குடும்பங்களுக்குத் திரைப்பட விருந்தளிக்கும்,

நடிகர் & தயாரிப்பாளர் ஜோதிகா கூறுகையில், “குடும்பம் மற்றும் உறவுகள் எப்போதுமே என் வாழ்வின் மையமாக இருக்கிறது. நான் கதையைக் கேட்டபோது, ​​இந்த உணர்ச்சி பொங்கும் குடும்ப நாடகத்தின் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்பினேன். திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் அயராத உழைப்பு மற்றும் ஆர்வத்தை ஒன்றாக இணைப்பது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். உடன்பிறப்பே எனது 50 வது படமாகும், மேலும் ஒரு நடிகராக எனது ரசிகர்கள் என் மீது பல ஆண்டுகளாகப் பொழிந்த அன்புக்கு நான் நன்றி கூறுகிறேன். Amazon Prime Video-இல் அக்டோபர் 14 அன்று வெளியாகும் இப்படத்தைப் பற்றி ரசிகர்களின் கருத்துகளை எதிர்நோக்குகிறேன்.” என்றார்.

2D என்டர்டெயின்மென்ட் நிறுவனர், தயாரிப்பாளர் & நடிகர் சூர்யா மேலும் கூறுகையில், “Amazon Prime Video-ஐ நம்பகமான ஸ்ட்ரீமிங் பார்ட்னராகக் கொண்டு இந்த சிறப்புப் படமான உடன்பிறப்பே படத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அருமையான நடிகர்களால் உயிர்ப்பிக்கப்பட்ட இப்படம் இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஒத்ததாக இருக்கும் என்று நம்புகிறோம், மேலும் இந்த தசரா பண்டிகைக் காலத்தில் குடும்பங்களை ஒன்றிணைக்கும். ” என்றார்.

உடன்பிறப்பே திரைப்படத்தை ஜோதிகா-சூர்யா தயாரிக்கின்றனர், ராஜசேகர் கற்புசுந்தரபாண்டியன் இணை-தயாரிப்பாளராக உள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவில் வரும் இப்படத்தை ஆண்டனி எல் ரூபென் தொகுத்துள்ளார் மற்றும் இதற்கு டி இமாம் இசையமைத்துள்ளார்.

சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்க்ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்கு முன்கூட்டிய அணுகல், இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 999 Amazon Prime உறுப்பினர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்கு சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பட்டியலிடப்பட்டுள்ள Amazon-இன் தரமான உள்ளடக்கத்தைக் கண்டு ரசிக முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும்.

Previous Post

“வெளியானது நடிகர் வடிவேலு திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்”

Next Post

Turmeric Mantra an artisanal pickles and podis brand was launched by social activist and columnist Apsara Reddy.

Next Post
Turmeric Mantra an artisanal pickles and podis brand was launched by social activist and columnist Apsara Reddy.

Turmeric Mantra an artisanal pickles and podis brand was launched by social activist and columnist Apsara Reddy.

Popular News

  • Vantha Rajavathaan Varuven movie Photos

    Vantha Rajavathaan Varuven movie Photos

    0 shares
    Share 0 Tweet 0
  • “Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ’பறந்து போ’ திரைப்படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது”- நடிகர் மிர்ச்சி சிவா!

    0 shares
    Share 0 Tweet 0
  • மார்வெல் குடும்பத்தின் மிஸ்டர் ரீட், சூ ஸ்டார்ம் மற்றும் பிறரின் பவர் பற்றி இங்கே பார்க்கலாம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜியோஹாட்ஸ்டாரில் வெளியானது ‘குட் வொய்ஃப்’ இணையத் தொடர்…அதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் ஹைலைட்ஸ்!

July 5, 2025

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘லவ் மேரேஜ்’ படக்குழு

July 5, 2025

ஃபீனிக்ஸ் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

பறந்து போ – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

3 BHK விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

July 5, 2025

”இயக்குநர் ராமிடம் நிறைய கற்றுக் கொண்டேன்”- நடிகை கிரேஸ் ஆண்டனி!

July 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.