திருவனந்தபுரம்: கேரளாவில் நடக்கும் பெண்கள் சுவர் போராட்டத்தின் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
கேரளாவில் ”பெண்களின் சுவர்” போராட்டம் இன்று நடக்கிறது. பெண்கள் மட்டுமே இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
இந்த போராட்டத்திற்கு வனிதா மதில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான சம உரிமை என்று கோரிக்கையின் அடிப்படையில் இந்த போராட்டம் நடக்க உள்ளது.
கேரள அரசு ஆதரவுடன் இந்த போராட்டம் நடக்கிறது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் காசர்கோட்டில் நடக்கும் இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார். சபரிமலை பிரச்சனைக்கு மத்தியில் இந்த போராட்டம் நடப்பதால் இது அதிக கவனம் பெற்றுள்ளது.