• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை

by Tamil2daynews
December 30, 2019
in சினிமா செய்திகள்
0
தணிக்கைத் துறையினரின் பாராட்டு பெற்ற படம் ‘வன்முறை
2
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர்  அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வன்முறை’.இப்படம்  தமிழ் மற்றும்  மலையாளம் என இரு மொழிகளில்   உருவாகியிருக்கிறது.
கதை நாயகனாக ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார். பிரதான நாயகியாக அர்ஷிதா ஸ்ரீதர் நடிக்க , வினோத்,நேகா சக்சேனா, சார்மிளா
மற்றும் நடிகர்கள் அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 இப்படத்தை இயக்கியிருப்பவர்  மஞ்சித் திவாகர் இவர் கேரள வரவு.தமிழில் இயக்குநராக  அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர்,இசையமைப்பாளர் சிவ சுகுமாரன்,கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா, சண்டைப் பயிற்சி இயக்குநர் ஜாக்கி ஜான்சன்,புகைப்படக் கலைஞர் அஜீஸ்,என இயக்குநருடன் இணைந்த  திறமைக்கரங்களின் கூட்டு முயற்சியில் ‘வன்முறை’ படம் உருவாகியுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும்  கொடுமைகளும் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் உண்மைகள்  வெளியே தெரியாமலேயே புதைக்கப்படுகின்றன.
கண்முன்னே பொள்ளாச்சியில் நடந்த தொடர் கொடூரங்கள் அச்சமூட்டும் சம்பவங்களாக கண்முன் நிழலாடுகின்றன .
தெலுங்கானாவில் நடைபெற்ற கொடுமையும் மக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது .பொள்ளாச்சி, தெலுங்கானா போன்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘வன்முறை’ படம் உருவாகி உள்ளது.  பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் எச்சரிக்கையூட்டும் வகையிலும் ‘வன்முறை’ படம் உருவாகியுள்ளது .
 கேரளாவிலிருந்து தமிழகம் வரும் இளம்பெண்ணுக்கு ஒரு கொடுமை நேர்கிறது .அது பற்றி விசாரிக்கும் கடமையும் பொறுப்பும்  நிறைந்த போலீஸ் அதிகாரியாக வரும் ஆர்.கே .சுரேஷ் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தேடிச்செல்கிறார் அவற்றைப் பற்றி ஆராய்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களின்ஆரம்பம் எங்கே இருக்கிறது என்று அறிவதற்காக அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளும் பொறுப்பான கடமைகளும் படம் பார்ப்பவரை படபடக்க வைக்கும் .படத்தில் வில்லனாக வரும் வினோத்  கிருஷ்ணனின் கொடூர செயல்கள் பதறவைக்கும். அவரைப் போன்ற கொடூர ஆண்கள்
சமூகத்தில் பெண்ணை ஒரு நுகர் பொருளாகக் கருதும் மனப்பான்மை கவலைப்பட வைக்கும்.
தமிழில் படம் இயக்குவது பற்றி கேரள  இயக்குநர் மஞ்சித் திவாகர்  கூறும்போது,
“தமிழகத்தில்  அறிமுகமாவதில் நான்  பெருமைப்படுகிறேன். புதிய முயற்சிகள் அனைத்திற்கும் கைகொடுக்கும் ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள் .இங்கே தமிழர்கள் ஆள் யார் என்று  பார்ப்பதில்லை திறமையை மட்டுமே பார்க்கிறார்கள். எனவேதான் நம்பிக்கையுடன் இங்கே தமிழ்ப்படம் இயக்க  வந்திருக்கிறேன். இது பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும்.” என்கிறார்.
படத்தை பார்த்த தணிக்கைத் துறையினர் “இது எல்லாருக்குமான படம். முக்கியமாக பெண்களுக்கு  எச்சரிக்கை தரும் வகையில்  உருவாகியுள்ள படம் ” என்று பாராட்டி உள்ளனர். மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.
‘வன்முறை’ ஜனவரி மூன்றாம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
Tags: RK Suresh
Previous Post

தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது: ஆளுநர் புகழாரம்

Next Post

Natty replaces Gautham Vasudev Menon in Sibiraj’s Walter 

Next Post
Natty replaces Gautham Vasudev Menon in Sibiraj’s Walter 

Natty replaces Gautham Vasudev Menon in Sibiraj’s Walter 

Popular News

  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • I’m Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.