• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

by Tamil2daynews
June 20, 2026
in விமர்சனம்
0
மக்கள் தலைவா – விமர்சனம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மக்கள் தலைவா – விமர்சனம் 

 

தற்போது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக வந்திருக்கும் படம். சோம்பேறியாக ஊர் சுற்றிக்கொண்டு,அவ்வப்போது போலி போராட்டங்கள் மூலம் கிடைக்கும் பணத்தால் வாழ்க்கையை ஓட்டும் நாயகன் ரவிமரியாவை,பெரும் செல்வந்தரான ராதாரவி திரைப்பட நாயகனாக்குகிறார்.பிறகு அவரது தலைமையில் அரசியல்கட்சி தொடங்குகிறார்.ராதாரவி சொல்வதையெல்லாம் அப்படியே செய்யும் ரவி மரியா,குறுகிய காலத்தில் தலைவராக உருவெடுக்கிறார்.அதன்பின் நடக்கும் நிகழ்வுகள்தாம் திரைக்கதை.கதாநாயகனாக நடித்தாலும் தன் வழக்கமான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார் ரவிமரியா.வசனங்களில் குறைவில்லை.அங்கங்கே சிரிக்க வைக்கவும் தவறவில்லை.

ரவிமரியாவை ஆட்டிப்படைக்கும் கதாபாத்திரத்திற்கு அட்சரசுத்தமாகப் பொருந்தியிருக்கிறார் ராதாரவி.அவருடைய பாத்திரப்படைப்பு நாட்டுமக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.மக்கள் தலைவா' திரைப்பட விமர்சனம் - Latest Tamil News | Tamil Cinema Events | Upcoming Tamil Movies | Kollywood actress Gallery | Rajini | Ajith | Vijay

நிஜத்தில் அரசியல்வாதிகளாகத் தோற்றுப்போன பழ.கருப்பையா,நாஞ்சில்சம்பத் ஆகியோர் அரசியல்வாதிகளாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்கள்.படத்தின் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனும் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார்.

கஞ்சாகருப்பு இப்போது அமைச்சராக இருக்கும் ஒருநடிகரை நினைவுபடுத்துகிறார்.இயக்குநர் பேரரசு,பயில்வான் ரங்க்நாதன் ஆகியோர் நன்று.படத்தில் நாயகி இல்லை என்கிற குறைதீர்க்க ஒருபாடலுக்கு வந்துபோகிறார் அக்‌ஷரா விஜய்.ஒளிப்பதிவாளர் கார்த்திக் எஸ்.நாயர்,இசையமைப்பாளர் துளசிராமன், படத்தொகுப்பாளர் துர்கேஷ் ஆகியோர் தங்கள் பணிகளைக் குறைவின்றிச் செய்திருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கும் ராம்தேவ்,படைத்திருக்கும் கதாபாத்திரங்கள் அப்படியே தற்கால ஆட்சியினரைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.முட்டா முட்டா முட்டா ஊருதான் என்கிற பாடலில் மக்களின் முகத்திலறைந்திருக்கிறார்.

பேராசை என்பது ஒரு மனிதனுக்கு சாதாரண விஷயம் அதேசமயம் அது எவ்வாறு படுகுழியில் தள்ளும் என்பதை அருமையான தெளிவான திருக்கதியுடன் விளக்கும் படம். மொத்தத்தில் இந்த மக்கள் தலைவா படத்தை ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

Previous Post

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

Next Post

அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

Next Post
அபிஷேக் நாமாவின் ‘நாகபந்தம்- (Nagabhandham) ‘ திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

அபிஷேக் நாமாவின் 'நாகபந்தம்- (Nagabhandham) ' திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.