ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் சொல்லும் அழகான படைப்பாக வேலன் இருக்கும்”- மீனாக்‌ஷி கோவிந்தராஜன் !

by Tamil2daynews
December 28, 2021
in சினிமா செய்திகள்
0
“குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் சொல்லும் அழகான படைப்பாக வேலன் இருக்கும்”- மீனாக்‌ஷி கோவிந்தராஜன் !
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் சொல்லும் அழகான படைப்பாக வேலன் இருக்கும்”- மீனாக்‌ஷி கோவிந்தராஜன் !

Skyman Films International கலைமகன் முபாரக் தயாரித்து,  கவின் இயக்கத்தில், பிக்பாஸ் முகேன் நடிப்பில் வரவிருக்கும் ‘வேலன்’ திரைப்படத்தின் ஒரு பகுதியாக தானும்  இருப்பதில், நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் வெகு உற்சாகமாக இருக்கிறார். நடிகை  மீனாக்‌ஷி ஏற்கனவே தனது  அற்புதமான தோற்றத்தில்,  இளைஞர்களின் இதயங்களை வென்றுள்ளார். நகர்ப்புறம்  மற்றும் கிராமப்புறம் என இரண்டு விதமான கதாபாத்திரங்களுக்கும் அட்டாகாசமாக  பொருந்தக்கூடிய தனித்தன்மையான தோற்றப்பொலிவை  ஜோதிகா, நஸ்ரியா நஷீம் போன்ற வெகு  சில ஹீரோயின்களே பெற்றிருந்தனர், அந்த வரிசையில் அவர்களுக்கடுத்து ஒரு வலுவான  இடத்தை பெற்றுள்ளார் நாயகி மீனாக்‌ஷி.  அவரது  நடிப்பில் வரவிருக்கும் “வேலன்” திரைப்படம் தற்போது வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், திரைத்துறையில் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்கள் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களில் அவரை நடிக்க  வைக்க விரும்புகின்றனர்.

இது குறித்து நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கூறுகையில்..,
“ வேலன் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த அம்சம் குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் அழகான  விதத்தில் சொன்னது  தான். குடும்பத்துடன் இருக்கும்போது  எப்போதுமே ஒருவர் சிறந்த நிம்மதியான மனநிலையுடன் சந்தோஷமாக இருப்பார்கள். இதை நான் ‘வேலன்’ குழுவுடன் பணிபுரியும் போது ஆத்மார்த்தமாக உணர்ந்தேன். அவர்கள் என்னைத் தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினராகவே  நடத்தினார்கள். வேலன் போன்ற நல்ல குடும்ப பொழுதுபோக்கு திரைக்கதையை ஊக்குவித்ததோடு, அதில் என்னையும் ஒரு அங்கமாக்கிய தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் சாருக்கு நன்றி. பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில்தான் நடிகைகள் அதிக மதிப்பையும், கவனத்தையும் பெறுகிறார்கள் என்ற கருத்து இருந்தாலும், ‘குடும்ப படங்கள்’தான் அவர்களின் சிறப்பான குணாதியசத்தை வெளிப்படுத்துவதாக நான் நம்புகிறேன். குடும்பம் என்பது ஆண்கள் மற்றும் பெண்களின் பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று, அங்கு அவர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு, ஆரோக்கியமான குடும்பத்திற்கு வழி வகுக்கும். அதேபோல், ஆண் மற்றும் பெண் நடிகர்கள் எப்போதும் குடும்ப திரைப்படங்களில் சமமான அளவில், முக்கிய கதாபாத்திரங்களைக் பெறுகிறார்கள். இந்த படத்தில் ஒரு அழகான கதாபாத்திரத்தில் நடிகக் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. முகேன் மிகவும் இனிமையான மனிதர். அவரது தொழிலின் அர்ப்பணிப்பு  தாண்டி, அவர் ஒரு நல்ல உள்ளம்  கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவரிடமும் மிகவும்  அன்பாக பழகுவார். குடும்ப பார்வையாளர்கள் விரும்பும் வகையில் ஒரு அழகான கதையை கவின் வடிவமைத்துள்ளார். தனிப்பட்ட முறையில், ஒரு ரசிகர் என்ற வகையில், இந்தக் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தை, திரையரங்குகளில் காண ஆர்வமாக காத்திருக்கிறேன். குடும்ப உறவுகளின் மதிப்பையும், உணர்வுகளின் மேன்மையையும் சொல்லும் அழகான படைப்பாக வேலன் இருக்கும்.

வேலன் திரைப்படத்தை இயக்குநர் கவின் எழுதி இயக்கியுள்ளார்,  Skyman Films International சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். கோபி சுந்தர் இசையமைக்க, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார், K.சரத்குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். D.பாலசுப்ரமணியன் (கலை), மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடன அமைப்பு), சபா டிசைன்ஸ் (பப்ளிசிட்டி டிசைன்ஸ்), ததாஷா A பிள்ளை-K. ராஜன் (ஆடைகள்), V.சித்தரரசு (ஸ்டில்ஸ்), சந்திரன் பச்சமுத்து-சவரிமுத்து-கவின் (வசனம்), D.உதயகுமார் (ஒலி வடிவமைப்பு), ஹரிஹரசுதன் (VFX), N.சக்திவேல் (ஒப்பனை), N.A.அன்பரசு (இணை இயக்குநர்), N. நிர்மல் (தயாரிப்பு நிர்வாகி), மற்றும் JB விக்ரம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

Previous Post

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் “யானை” படத்தின்  டீசர் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை !

Next Post

கானா பாடல்களால் நிறைந்த கானசபை .

Next Post
கானா பாடல்களால் நிறைந்த கானசபை .

கானா பாடல்களால் நிறைந்த கானசபை .

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “வா வரலாம் வா” விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்னபூரணி’ – விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ”சினிமாவில் மட்டும் தான் சாதி மதம் இவைகள் எதுவுமே கிடையாது” – ’முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ பட ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் பேரரசு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“வா வரலாம் வா” விமர்சனம்

December 1, 2023

‘அன்னபூரணி’ – விமர்சனம்.

December 1, 2023
சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

December 1, 2023

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகி இருக்கும் ‘தி கோட் லைஃப்’ உலகம் முழுவதும் ஏப்ரல் 10, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!

December 1, 2023

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி 51 படப் படப்பிடிப்பு கோலாகலமாக மலேசியாவில் நிறைவு !!

December 1, 2023

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்துள்ளது!

December 1, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!