• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், வாத்தியாராக விஜய் சேதுபதி மற்றும் கதையின் நாயகனாக நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” !

by Tamil2daynews
April 22, 2021
in சினிமா செய்திகள்
0
RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், வாத்தியாராக விஜய் சேதுபதி மற்றும் கதையின் நாயகனாக  நடிகர்  சூரி நடிக்கும் “விடுதலை”  !
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் முற்றிலும் மாறுபட்ட களங்களில், தன் தனித்த முத்திரை கொண்ட  படங்களினால்  இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்றுள்ளார். தயாரிப்பாளர் எல்ரெட் குமார் RS Infotainment நிறுவனம் சார்பில்  அழுத்தமான கதைகள் கொண்ட வெற்றி படங்களை தந்து விமர்சர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கொண்டாடும்,  மிக சிறந்த தயாரிப்பாளராக மிளிர்ந்து வருகிறார். இவ்விருவரும் தற்போது ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்கள். “விடுதலை” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி முன்னணி பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியம்ங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி, பவானிஶ்ரீ உட்பட மொத்த படக்குழுவும் அங்கேயே குடியிருப்பு  வசதிகள் ஏற்படுத்தி, தங்கி படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

“அசுரன்” படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், சீட் நுனியில் அமரவைக்கும், பரபர திரில்லான திரைக்கதையுடன்  ரசிகர்களை அசத்தவுள்ளார்.

வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். R.ராமர் படத்தொகுப்பு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். ஜாக்கி கலை இயக்கம் செய்கிறார்.

RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார்  இப்படத்தினை பிரமாண்ட முறையில், இந்தியாவெங்கும் தமிழ் மட்டுமல்லாது, பல மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டு வருகிறார்.

Previous Post

மாபெரும் சாதனை படைத்த ‘புஷ்பா’..!

Next Post

தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” !

Next Post
தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” !

தீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” !

Popular News

  • நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கை மற்றும் உணர்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள ‘டோரதி’ திரைப்படம் உதவுகிறது”… சகோதரன் அமைப்பினர் பாராட்டு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.

September 29, 2026

ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்

September 29, 2026

நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்!

September 29, 2026

அனிருத்தின் அல்புகெர்க்கி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ஸ்மித் ஆஷர் இசையில் உருவான ‘அன்னக்கிளியே’ மியூசிக் வீடியோ ஆல்பம்

September 29, 2026

கே.மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 29, 2026

திரையரங்குகளில் குடும்ப பார்வையாளர்களின் கைத்தட்டலிலும் கிளைமாக்ஸில் முத்துமணி பாடலின் ஆரவாரத்திலும் ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது!

September 29, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.