• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“மைக் டைசன்”உடன் நேருக்கு நேர் மோதும் விஜய் தேவரகொண்டா…!

by Tamil2daynews
November 17, 2021
in சினிமா செய்திகள்
0
“மைக் டைசன்”உடன் நேருக்கு நேர் மோதும் விஜய் தேவரகொண்டா…!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“LIGER”  அமெரிக்க படப்பிடிப்பில் நேருக்குநேர் சந்திக்கும்,  வரலாற்று நாயகன் மைக் டைசன் மற்றும்  விஜய் தேவரகொண்டா!
உலகின் பல முனைகளிலும் உள்ள மக்கள் அனைவராலும் கொண்டாடப்படும், வரலாற்று நாயகன் மைக் டைசன், இந்திய திரையுலகில்,  பன்மொழி இந்திய திரைப்படமாக உருவாகும்   LIGER ( saala Crossbreed ) படத்தில் அறிமுகமாகிறார். இன்றைய தலைமுறையின் கனவு நாயகனாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில்,
கமர்ஷியல் படங்களின் ராஜாவாக திகழும் திறமைமிகு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இப்படத்தை இயக்குகிறார். வீழ்த்தமுடியாத வீரனாக,  குத்துச்ண்டையில் அதிரடி பஞ்ச்களால் மக்களின் அபிமானத்தை குவித்த,  வரலாற்றின் புகழ் மிகு நாயகன் மைக் டைசன் மிக முக்கியமான,  நேர்த்தியான பாத்திரத்தில்  நடிக்கிறார்.
இப்படத்தின் பொன்நாள் வந்தே விட்டது. தற்போது  “LIGER” படக்குழு அமெரிக்காவில் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இருவரும் பங்குபெறும் மிக முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளது. இன்று துவங்கியுள்ள இந்தப்படப்பிடிப்பில், மிக முக்கிய காட்சிகள் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டு வருகிறது. வெளியாகியுள்ள படப்பிடிப்பு தள போஸ்டரில், விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இருவரும் சிரித்து மகிழ்ந்தபடி இருக்கிறார்கள். ஆனால் படத்தில் அதிரடியான பாத்திரங்களை ஏற்றிருக்கும் இருவரும், இயக்குநர் ‘ஆக்சன்’ சொன்னவுடனே முற்றிலும் கதாப்பாத்திரங்களாகவே மாறிவிடுவார்கள்.
இந்த மனிதர் அன்பானவர்  ❤️, இவருடன் இணைந்திருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் பொக்கிஷமாக பாதுகாப்பேன். அதிலும் இந்த தருணம், வாழ்நாள் பொக்கிஷமாக இருக்கும்.  #Liger Vs The Legend..
இரும்பு மனிதரை நேருக்கு நேர் சந்தித்தபோது @MikeTyson ,” என விஜய்தேவரகொண்டா தனது வலைதளபக்கத்தில் டிவிட் செய்துள்ளார்.
LIGER  படத்தில் மேலும் பல வெளிநாட்டு குத்து சண்டை வீரர்களும் இணைந்து நடிக்கின்றனர்.  Puri connects நிறுவனத்துடன்  பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான  Dharma Productions நிறுவனம்  இணைந்து தயாரிக்கிறது.
இந்தியாவின் பன் மொழிப்படைப்பாக பிரமாண்டமாக உருவாகும் இப்படைப்பில், உலகப்புகழ் மைக் டைசன் இணைய,  Puri connects மற்றும் Dharma Productions நிறுவனங்கள் இப்படத்தை மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா ஆகியோர்  இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் மிக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகர் (Liger) படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவாகிறது.
LIGER திரைப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2022 ஆண்டின் முதல் காலாண்டில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர்கள் : விஜய் தேவரகொண்டா, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, மற்றும் கெட்டப் ஶ்ரீனு.
தொழில் நுட்ப குழு
இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா
தயாரிப்பு நிறுவனங்கள் : Puri connects and Dharma Productions
ஒளிப்பதிவாளர்- விஷ்ணு சர்மா
கலை இயக்கம்- ஜானி சையிக் பாட்ஷா
படதொகுப்பாளர்- ஜுனைத் சித்திக்
சண்டை காட்சிகள் இயக்குனர்- Kecha
Previous Post

“ஜெய்பீம்” திரைப்படத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த  இயக்குனர் அமீர்..!

Next Post

நடிகர் மஹத் நடிக்கும்  புதிய படம் -2030…!

Next Post
நடிகர் மஹத் நடிக்கும்  புதிய படம் -2030…!

நடிகர் மஹத் நடிக்கும்  புதிய படம் -2030...!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கைமேரா பட இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.