• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அடிக்கு மேல் அடி வாங்கும்  விஜய் சேதுபதி..!

by Tamil2daynews
December 12, 2021
in சினிமா செய்திகள்
0
அடிக்கு மேல் அடி வாங்கும்  விஜய் சேதுபதி..!
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘திருடாதே’ டைட்டிலுக்கு மறுப்பு !
விஜய் சேதுபதிக்கு மறுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் பட டைட்டில்; காரணம் இதுதான்!
எம்.ஜி.ஆர்., சரோஜா தேவி நடித்த ‘திருடாதே’ படத்தின் டைட்டிலை நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் படத்துக்குக் கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் அதை வழங்க மறுத்து விட்டதாகவும்  ஒரு தகவல் பரவிவருகிறது.
இதுகுறித்து மேற்கொண்டு விசாரித்த போது,
நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’ டைப் கதையில நடிக்கணும்னு ஒரு ஆசை இருக்கு. இதைப் பல இடங்கள்ல அவரே வெளிப்படுத்தி இருக்கார். இந்த நிலையில, அவர் நடித்த ‘லாபம்’ படத்தின் தயாரிப்பாளர் மீண்டும் அவரை வைச்சு ஒரு படத்தை எடுக்க முடிவு செய்து, அந்தப் படத்துக்கு ‘திருடாதே’ன்னு டைட்டில் வச்சிடலாம்னு ஃபிலிம் சேம்பர்ல அந்த டைட்டிலை பதிவு செய்ய அணுகியிருக்காங்க.
ஃபிலிம் சேம்பர்ல இருக்கிற டைட்டில் கமிட்டியில இருக்கிறவங்களும், இந்த டைட்டிலுக்கு ஒப்புதல் சொல்லியிருக்காங்க.
இந்த விஷயம் ‘திருடாதே’ படத்தைத் தயாரித்த ‘சாரதா ஸ்டூடியோ’ எ.எல்.சீனிவாசனின் குடும்பத்தினருக்குத் தெரிய வர, எ.எல்.சீனிவாசனின் மரும்கள் ஜெயந்தி கண்ணப்பன், உடனடியா இதுக்கு ஆட்சேபனை தெரிவிச்சு. டைட்டிலைத் தர மறுத்துட்டாங்க’ என்றனர் விவரமறிந்தவர்கள்.
ஜெயந்தி கண்ணப்பனிடம் தொடர்பு கொண்டபோது,
”பழைய டைட்டில்களை மறுபடியும் வைக்கிறதே சினிமாவுல ஒரு ஆரோக்கியமான விஷயம் கிடையாது. பழைய, அந்த ஹிட் படங்களின் சாதனைகள் இதன் மூலம் மறைக்கப்பட்டுடும்.
‘திருடாதே’ படத்தின் டைட்டிலை முன்னாடி மறைந்த வசந்தகுமார் தன்னுடைய மகனுக்காகக் கேட்டார். அப்பவே நான் மறுத்துட்டேன். இப்ப என்னன்னா, எங்க கவனத்துக்கு வராமலே டைட்டிலைப் பயன்படுத்திக்க முயற்சி செய்திருக்காங்க.
‘திருடாதே’  எம்ஜிஆருடைய சினிமாப் பயணம் தொடங்கி சரியா 25 வருஷத்துல நடிச்ச படம் இது. அப்ப ‘புரட்சித் தலைவர்’ கிடையாது. கலைஞர் அவருக்குக் கொடுத்த ‘புரட்சி நடிகர்’ அடைமொழிதான் இந்தப் படத்தின் டைட்டில் கார்டுல வரும். 1961ம் ஆண்டு ரிலீசாச்சு. சரியா இப்ப 60 வருஷமாகுது.
நாங்க இந்தப் படத்தின் டைட்டிலைக் கொடுக்க விரும்பாததுக்குக் காரணமும், இந்தப் படத்தின் சிறப்புகளும் சாதனைகளும் மறைக்கப்பட்டுடும்னுதான்..
விஜய் சேதுபதி நடிச்சு ‘திருடாதே’ன்னு படம் வெளிவந்தா கொஞ்ச காலத்துக்குப் பிறகு அந்தப் படத்தின் பெயரைச் சொன்னாலே எம்.ஜி.ஆருக்குப் பதில் விஜய் சேதுபதி முகம்தான் கண் முன்னாடி வரும் ” என்கிறார் ஜெயந்தி கண்ணப்பன்.
‘லாபம்’ தயாரிப்பாளர் தரப்பில் பேசிய போது, ‘திருடாதே’ படத்தின் டைட்டிலைக் கேட்டது உண்மைதான். இது தொடர்பா இன்னொரு முறை பேசிப்பார்க்கலாம்னு இருக்கோம்’ என்றவர்கள், “விஜய் சேதுபதி நடித்து வரும் படத்துக்குத்தான் இந்தத் தலைப்புக் கேட்கப்பட்டதா” என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்து விட்டனர்.
ஒருவேளை ‘திருடாதே’ டைட்டில் கிடைக்கவில்லையென்றால், இவர்கள் ‘மலைக் கள்ளன்’ டைட்டிலை கேட்கலாமென முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப் படுகிறது.
தகவல் : vikatan.com
Previous Post

ஸ்டைலிஷ் ஹீரோ ரஹ்மான் மகள் கல்யாணம் . 

Next Post

ஆன்டி இண்டியனை திரையிடக்கூடாது – பாஜக எச்சரிக்கை.

Next Post
ஆன்டி இண்டியனை திரையிடக்கூடாது – பாஜக எச்சரிக்கை.

ஆன்டி இண்டியனை திரையிடக்கூடாது - பாஜக எச்சரிக்கை.

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராக் ஸ்டார்’ அனிருத்தின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை அசத்தியுள்ளது டிஸ்னி + ஹாஸ்டார்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • அங்கீகாரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மரியா – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.