• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி வெளியிட்ட ரெஜினா கஸண்ட்ராவின் “சூர்ப்பனகை” ஃபர்ஸ்ட் லுக் ! 

by Tamil2daynews
March 4, 2020
in சினிமா செய்திகள்
0
விஜய் சேதுபதி வெளியிட்ட ரெஜினா கஸண்ட்ராவின் “சூர்ப்பனகை” ஃபர்ஸ்ட் லுக் ! 
0
SHARES
136
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மரத்தை சுற்றி டூயட் பாடும் ஹீரோயினாக அல்லாமல் மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் மீது நாட்டம் கொண்டு, வித்தியாசமான படங்களாக தேடி நடித்து, தனக்கென தனிச்சிறப்பான இடத்தை பிடித்துள்ளார் நடிகை ரெஜினா கஸண்ட்ரா. தெலுங்கில் அவர் எதிர்மறை பாத்திரத்தில் நடித்த “எவரு” பெரு வெற்றி பெற்ற நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களும் பெரும் நம்பிக்கை அளிக்கும் தரமான படங்களாக இருக்கின்றன. தமிழிலும் அவர் அடுத்தடுத்து எதிர்பார்ப்பு மிக படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா கஸண்ட்ரா. “திருடன் போலிஸ்” படப்புகழ் இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், மர்ம வகை திரில்லர் படம்  ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். விஜய் சேதுபதி வெளியிட்ட ரெஜினா கஸண்ட்ராவின் “சூர்ப்பனகை” ஃபர்ஸ்ட் லுக்  ரசிகர்களிடம் பெரு வரவேற்பை பெற்று வருகிறது.


இயக்குநர் கார்த்திக் ராஜு  இதுகுறித்து கூறியதாவது ….

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது  மொத்த படக்குழுவிற்கும்   பெரும் மகிழ்ச்சி. இது அவரது பெருந்தனமையே ஆகும்.

படத்தின் தலைப்பு “சூர்ப்பனகை” என்பதிலேயே இப்படம் கனமான கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டது என்பது விளங்கும். “சூர்ப்பனகை” எனும் பெயர் படத்தில் என்ன வகையான பாதிப்பை தரும், ரெஜினா கஸண்ட்ராவின் கதாப்பாத்திரம் என்ன மாதிரி இருக்கும் என பெரும் ஆர்வத்தை ரசிகர்களிடம் தூண்டியிருக்கும். அதுவும் ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள ரெஜினா கஸண்ட்ராவின் தோற்றம் மேலும் பல கேள்விகளை ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவை அனைத்தும் இப்போதைக்கு மர்மமே.   இது குறித்து தற்போது ஏதும் சொல்ல முடியாது. ரசிகர்கள் அதனை திரையில் காணட்டும் அப்போது  தான் அது இன்ப அதிர்ச்சியாக இருக்கும். சூர்ப்பனகை ஒரு மர்ம வகை திரில்லர் திரைப்படம். சாகசம், ஹியுமர், திரில்லர் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக இப்படம்  இருக்கும். ரசிகர்களை புது வகை திரில் அனுபவத்திற்கு அழைத்து செல்வதாக இப்படம் இருக்கும் என்றார்.

Apple Tree Studios சார்பில் ராஜசேகர் வர்மா இப்படத்தை தயாரிக்கிறார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. கடந்த ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்கி, குற்றாலம் முதலான நேரடி இடங்களில்  தீவிரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 
 
Tags: Caarthick RajuRegina CassandraSoorpanagai
Previous Post

ஆர்யா- சுந்தர்.சி நடிப்பில் ”அரண்மனை3” ராஜ்கோட்டில் படப்பிடிப்பு ஆரம்பமானது.

Next Post

சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது “வால்டர்” திரைப்படம் ! 

Next Post
சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது “வால்டர்” திரைப்படம் ! 

சென்சாரில் U சான்றிதழ் பெற்றுள்ளது “வால்டர்” திரைப்படம் ! 

Popular News

  • மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹபீபி’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை கொடுத்துள்ள நடிகை மாளவிகா மனோஜ்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐஸ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஐஸ் அசோக் – அலீமா ஐட் திருமணம்

    4 shares
    Share 4 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.