• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா

விஷால் வெளியிட்ட ‘அகோரி’ படத்தின் டீஸர்!

by admin
January 5, 2019
in சினிமா, சினிமா செய்திகள்
0
விஷால் வெளியிட்ட ‘அகோரி’ படத்தின் டீஸர்!
0
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ,நடிகர் சங்க செயலாளர் விஷால் ‘அகோரி ‘படத்தின் டீசரை இன்று வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

டீஸரைப் பார்த்த விஷால் பபம் பற்றியும் பக்குழுவினர் பற்றியும் விசாரித்து அறிந்தவர் இது ஒரு வித்தியாச முயற்சியாக இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறியதுடன் படக் குழுனரை வாழ்த்தினார்.

ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி பாலா,
மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனனுடன் இணைந்து ‘அகோரி’ படத்தை தயாரிக்கிறார். இப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .

சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை, இது ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர் காமெடி காதல் சென்டிமெண்ட் எல்லா அம்சங்களும் உள்ள படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும்.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற நடிகர் சாயாஜி ஷிண்டே இதில் அகோரியாக நடிக்கிறார். அவர் தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடிப்பவர், படத்தின் கதை தன் தோற்றம் எல்லாமும் கேட்டதும் உடனே நடிக்கச் சம்மதித்து இருக்கிறார். மிகவும் ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார்.

படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னை பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமான
ஹரிதுவார் செட் அமைத்து 150 அகோரிகளுடன் நடித்த காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்திற்காக கேரளா காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு 200 அகோரிகள் நடிக்கும் காட்சிகளும் படமாகியுள்ளன.

படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார். இவரது உயரம் 6.5 அடி ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார், இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர், இவர் ‘144 ‘பட நாயகி. மைம் கோபி , சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி, கார்த்தி, கலக்கப்போவது யாரு சரத், டிசைனர் பவன், ஆகியோருடன் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வரும் ஃபோர் மியூசிக் . நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது., ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன், வசனத்தை தயாரிப்பாளர் ஆர்.பி பாலா எழுதியுள்ளார்.

‘அகோரி’ படத்தை விரைவில் வெளியிட உள்ளனர்.

https://youtu.be/z0iH1mHSocw

Tags: Agorivishalஅகோரிவிஷால்
Previous Post

Actress Raashi Khanna Latest photoshoot Stills

Next Post

Sathru – Teaser

Next Post
Sathru – Teaser

Sathru - Teaser

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.