• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

2018ம் ஆண்டின் சிறந்த நடிகை யார்?

by tamil2daynews
January 1, 2019
in சினிமா செய்திகள்
0
2018ம் ஆண்டின் சிறந்த நடிகை யார்?
0
SHARES
66
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

2018ம் ஆண்டின் இறுதியை நெருங்கி விட்டோம். இந்த ஆண்டு ஹீரோக்கள் அணிவகுப்பை போலவே பல முன்னணி ஹீரோயின்களின் அணிவகுப்பும், அவர்களிடம் இருந்து உண்மையிலேயே டஃப் போட்டிகளும் பார்க்க முடிந்தது. இதில், அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு முதலிடத்தை பிடித்துள்ள அந்த நடிகை யார் என்பதை பார்க்கலாமா?

2018ம் ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகை சிறப்பு திரைப்படங்களாக சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் விக்ரமின் ஸ்கெட்ச், பிரபுதேவாவின் குலேபகாவலி ஆகிய படங்கள் வெளியாகின.

இந்த மூன்று படங்களும் படுதோல்வி அடைந்ததால், இந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், தமன்னா மற்றும் ஹன்சிகாவுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த மூன்று படத்தில் தானா சேர்ந்த கூட்டம் கலவையான விமர்சனங்கள் பெற்று ஓரளவுக்கு தப்பித்தது என்றும் சொல்லலாம்.

பின்னர் நடைபெற்ற திரையுலக பிரச்சனைகள் காரணமாக இரண்டு மாதங்கள் படங்கள் வெளிவர முடியாமல் தவித்தன. அதன் பின்னர் வெளியான விஷாலின் இரும்புத்திரை மற்றும் கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் படங்கள் இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தன.

இரும்புத்திரை மற்றும் நடிகையர் திலகம் ஆகிய இரு படங்களில் நடித்திருந்த சமந்தா திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றாலும், நடிகையர் திலகம் படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ் தனது வாழ்நாள் சிறப்பு நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி மீண்டும் சாவித்ரியை நம் கண் முன்னே காட்டினார்.

கோலமாவு கோகிலா மற்றும் இரும்புத்திரை படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து வழக்கம்போல் நான் லேடி சூப்பர்ஸ்டார் என்பதை மீண்டும் நிருபித்தார் நயன்தாரா.

நாச்சியார், செக்கச்சிவந்த வானம், காற்று வெளியிடை என மூன்று படங்களில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி ஜோதிகா பாஸ் மார்க் எடுத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அழகின் திருவுருவமாக காதல் வடியும் கண்களுடன் த்ரிஷா 96 படத்தில் நடித்து பலரது மனங்களை கொள்ளை கொண்டார்.

இறுதியாக வடசென்னை மற்றும் கனா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்து வருகிறார்.

இந்த ஆண்டு சமந்தா இரும்புத்திரை, நடிகையர் திலகம், சீமராஜா, யுடர்ன் என நான்கு படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும், எந்த படமும் அவரது தனித்துவமான நடிப்புக்கு தீனி போடவில்லை.

கீர்த்தி சுரேஷ் தானா சேர்ந்த கூட்டம், நடிகையர் திலகம், சீமராஜா, சாமி 2, சண்டக்கோழி, சர்கார் என இந்த ஆண்டு மொத்தம் 6 படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். ஆனால், அனைத்திலும் நடிகையர் திலகம் படம் மட்டுமே அவரது நடிப்பை வெளிப்படுத்தியது.

நயன்தாரா, த்ரிஷா 15 மற்றும் 16 ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் கனவுக் கன்னியாக வலம் வருகின்றனர். இந்த ஆண்டும் சிறப்பான நடிப்பை கொடுத்து 2ம் இடத்தை பிடிக்கின்றனர்.

கருப்பு அழகி, சென்னை பொண்ணு நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் கெளசல்யா முருகேசனாகவும், கூச்சமில்லாமல் நடிப்புக்காக கெட்ட வார்த்தை என்றாலும் துணிந்து பேசி நடிக்கும் பத்மாவாகவும் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நடிகையர் திலகம் மற்றும் பல ட்ரோல்களை கடந்து முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷும் நமது பட்டியலில் முதலிடம் பிடிக்கின்றனர்.

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சமந்தா, ஜோதிகா, பல படங்களில் நடித்த வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆண்ட்ரியா போன்ற நடிகைகளுக்கும் பாராட்டுக்கள்.

Previous Post

காஜல் கூட ஓடிப் போகணுமா? இதோ அதற்கான வழி!

Next Post

2018-ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள் மற்றும் டாப் 10 மொக்கை படங்கள் இதோ!

Next Post
2018-ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள் மற்றும் டாப் 10 மொக்கை படங்கள் இதோ!

2018-ம் ஆண்டின் டாப் 10 சிறந்த படங்கள் மற்றும் டாப் 10 மொக்கை படங்கள் இதோ!

Popular News

  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.