• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எமோசனல் ஃபேமிலி டிராமா மொய் விருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

by Tamil2daynews
December 10, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
எமோசனல் ஃபேமிலி டிராமா மொய் விருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! 

SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C R மணிகண்டன் இயக்கத்தில், ஒரு அழகான ஃபேமிலி எமோசனல் டிராமாவாக உருவாகியுள்ள ‘மொய் விருந்து’ படத்தின் அசத்தலான டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப்படத்தின் மையம். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய C R மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் C R மணிகண்டன் கூறுகையில்..,

நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, ‘மொய்விருந்து’ நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும் அனைவருக்கும் உதவி கிடைக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது, இதை மையமாக  வைத்து உருவாக்கியது தான் இந்தப்படம்,  அதனால் தான் இந்தப்படத்திற்கு ‘மொய் விருந்து’ என்று தலைப்பு வைத்துள்ளோம், இது அனைவருக்கும் பிடிக்கும்படியான எளிமையான அழகான ஃபேமிலி டிராமா என்றார்.

பாலுமகேந்திராவின் “வீடு” படப்புகழ் ‘ஊர்வசி’ அர்ச்சனா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ்  ரக்‌ஷன் மற்றும்  ஆயிஷா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் மற்றும் கொட்டச்சி  உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் முழு படப்பிடிப்பும் கொடைக்கானலின் பண்ணைக்காடு பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். M.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள், பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில்நுட்பக் குழு விபரம்
தயாரிப்பு நிறுவனம் – SK Films International
தயாரிப்பாளர் – S. கமலகண்ணன்
கிரியேட்டிவ் புரடியூசர் – விஜய் பாரதி. K
கதை, திரைக்கதை & இயக்கம் – CR. மணிகண்டன்
இசை – டி. இமான்
ஒளிப்பதிவு – M. சுகுமார்
எடிட்டர் – புவன்
கலை இயக்கம் – A.R. மோகன்
பாடல் வரிகள் – மோகன்ராஜன், ஏகாதசி, அருண்பாரதி, கருமாத்தூர் மணிமாறன்
நடன இயக்கம் – ஸ்ரீதர், ரகு தாபா, லீலாவதி.
ஸ்டண்ட் – கலை கிங்சன்
PRO – சதீஷ் (AIM)
Previous Post

“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !!

Next Post

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் – ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் – கூட்டணியில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் - ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் - கூட்டணியில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 1' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Popular News

  • லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • VR Dinesh & Kalaiyarasan’s ‘Thandakaaranyam’ Now Streaming on Amazon Prime Video — Tamil Version Gains Massive Buzz Nationwide

    0 shares
    Share 0 Tweet 0
  • கிறிஸ்டினா கதிர்வேலன் – விமர்சனம் ரேட்டிங் – 3.3 / 5

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கொம்பு சீவி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

December 21, 2025

பருத்தி இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு !!

December 21, 2025

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்களிடம் பரவலான பாராட்டுகள் பெற்ற ’ஸ்டீபன்’ படத்தின் போஸ்ட் கிரெடிட் காட்சி உளவியல் த்ரில்லரை முழுமையாக மறுவரையறை செய்கிறது!

December 21, 2025

JSK சதீஷ் குமாரின் “குற்றம் கடிதல் 2” திரைப்படம் Post-Production கட்டத்திற்குள் நுழைந்துள்ளது; டப்பிங் பணிகள் நேற்று தொடங்கின.

December 21, 2025

பான்-இந்தியா ரெபெல் ஸ்டார் பிரபாஸ் உலகளாவிய கதை சொல்லும் புரட்சியை “தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் பெஸ்டிவல்” மூலம் தொடங்கி வைத்தார்!!

December 21, 2025

பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா !!

December 21, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.